Skip to main content

சேதப்படுத்தப்பட்ட ஸ்ரீரெட்டி கார்! தமன்னா வெப் சீரிஸ் டீம் குறித்து போலீஸில் புகார்...

Published on 02/01/2020 | Edited on 02/01/2020

தெலுங்கு சினிமாவில் துணை நடிகையாக நடித்து வந்தவர் ஸ்ரீரெட்டி. இவர் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு தெலுங்கு சினிமாவிலுள்ள பல பிரபலங்கள் பற்றி மீடூ புகாரளித்தார். இதில் சில தமிழ் சினிமா பிரபலங்கள் குறித்தும் மீடூ புகாரளித்திருந்தார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஆந்திராவிலிருந்து சென்னைக்கு குடிபெயர்ந்தார். தற்போது தமிழ் சினிமாக்களில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.
 

sri reddy

 

 

அண்மையில் ஸ்ரீரெட்டி தனது பேஸ்புக் பதிவில், தமன்னா நடித்து வரும் வெப் தொடர் அவரது வீட்டிற்கு அருகே நடைபெறுவதாகவும் அதனால் பெரும் தொல்லையாக இருக்கிறது. நேரில் போய் அவர்களிடம் பிரச்சனை குறித்து பேச இருப்பதாக தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இதுகுறித்து அவர் காவல்நிலையத்தில் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளது. “எனது வீடு அருகே ஓய்வு பெற்ற போலிஸ் அதிகாரியின் ‘பங்களா வீடு’ உள்ளது. இந்த வீட்டில் கடந்த சில நாட்களாக சினிமா ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் வெளியே சென்று விட்டு இரவு வீடு திரும்பியபோது எனது வீட்டு வாசலில் வாகனம் நின்றதால் காரை வெளியே நிறுத்தி விட்டு சென்றேன். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது எனது காரின் 2 பக்க கதவுகளும் சேதப்படுத்தப்பட்டு இருந்தது.

மேலும் படப்பிடிப்பு நடத்தி வரும் தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளர் மனோஜ் என்பவர் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. எனவே காரை சேதப்படுத்தி விட்டு தப்பி சென்ற மர்மநபர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மனுவில் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இசை நிகழ்ச்சியில் தள்ளு முள்ளு - யாழ்ப்பானத்தில் பரபரப்பு

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
hariharan concert srilanka issue

பிரபல பாடகர் ஹரிஹரனின் ‘ஸ்டார் நைட்’ இசைநிகழ்ச்சி இலங்கை யாழ்ப்பனத்தில் உள்ள முற்றவெளி மைதானத்தில் நேற்று இரவு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் திரை பிரபலங்கள் தமன்னா, ரம்பா, கலா மாஸ்டர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். நடிகர் சிவா மற்றும் சின்னத்திரை பிரபலம் திவ்யதர்ஷினி ஆகியோர் தொகுத்து வழங்கினர். 

இந்த விழாவில் விஐபி டிக்கெட்டுகள் என குறிப்பிட்ட சில இடங்கள் ஒதுக்கப்பட்டு மற்ற இடங்களை இலவசமாக பார்வையாளர்களுக்கு அனுமதித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இரு இடங்களுக்கு மத்தியில் சில இடங்களை காலியாக விட்டுவிட்டு தடுப்பு சுவர் போட்டு வைத்துள்ளதாக சொல்லபடுகிறது. ஆனால் அந்த இலவச இடத்தில் பல்லாயிரக்கணக்கானோர் வந்ததால் விஐபி இடத்திற்கும் இலவச இடத்திற்கும் இடையில் இருந்த காலியான இடத்தில் பார்வையாளர்கள் செல்ல முயன்றனர். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவறுகளை மீறி ரசிகர்கள் உள்ளே குவிந்துள்ளனர். இதனால் அந்த கூட்டத்தை காவல் துறையினர் கட்டுப்படுத்த முடியாமல் இருந்த நிலையில் பர்வையாளர்களுக்கும் அவர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் கூட்டத்தில் சிலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதோடு பலரும் பல சிக்கலுக்கு ஆளானதாக தகவல் வெளியாகியுள்ளது.   

போலீஸார் அறிவுறுத்தியும் உள்ளே வந்தவர்கள் பின்னே போகாததால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் நிகழ்ச்சியை நடத்த முடியாமல் தவித்தனர். அதோடு  நிகழ்ச்சியும் இடைநிறுத்தப்பட்டு பின்பு குறுகிய நேரத்திலே முடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போன்று கடந்த செப்டம்பர் மாதம் சென்னையில் நடந்த ஏ.ஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் அனுமதிக்கும் மீறி ஏராளமானோர் குவிந்ததால் பெரும் சர்சையானது குறிப்பிடத்தக்கது. 

Next Story

"கார்த்தி எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார்" - தமன்னா

Published on 30/10/2023 | Edited on 30/10/2023

 

tamannaah speech in karthi 25 and japan event

 

ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜப்பான். இப்படம் கார்த்தியின் 25வது படமாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்க, இயக்குநர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவையும் கார்த்தி25 என இரண்டு திரையுலகப் பயணத்தையும் ஒரு சேரக் கொண்டாடும் வகையில் சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகப் பிரமாண்ட  விழா நடைபெற்றது. 

 

இந்தநிகழ்வில் சூர்யா, விஷால், ஆர்யா, ஜெயம் ரவி, கே.எஸ். ரவிகுமார், தமன்னா, யுவன் சங்கர் ராஜா, இயக்குநர்கள் பா. ரஞ்சித், சிவா, லோகேஷ் கனகராஜ், பி.எஸ். மித்ரன், ஹெச். வினோத், உள்ளிட்ட பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் மற்றும் இந்த 20 வருடங்களில் கார்த்தியுடன் இணைந்து பணியாற்றிய இயக்குநர்கள், சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

 

நடிகை தமன்னா பேசும்போது, “கோலிவுட்டில் எனது ஆரம்ப நாட்களில் எனக்கு ஒரு போதும் நண்பர்கள் இருந்ததில்லை. அந்த சமயத்தில் கார்த்தி எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். சென்னையை எனக்கு சிறப்பானதாக ஆக்கியதற்காக ஞானவேல் ராஜா சார், சிவா சார் ஆகியோருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். இதுபோன்ற மனிதர்கள் தான் சென்னை எனக்கு சிறந்ததாக இருக்கப் போகிறது என்கிற நம்பிக்கையை அளித்தார்கள். கார்த்தியுடன் பணியாற்றிய சமயத்தில் எப்போதும் சினிமாவைப் பற்றியும் அவருக்கு பிடித்தமான கதாபாத்திரங்களை பற்றியும் தான் பேசிக் கொண்டிருப்பார். அவர் வெற்றிகரமாக 25 படங்களை நிறைவு செய்துவிட்டார் என்பது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இனி அடுத்தடுத்து வரும் படங்களிலும் இதுபோன்று மிகப்பெரிய வெற்றியை அவர் பெறவேண்டும் என நான் வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.

 

இயக்குநர் சிறுத்தை சிவா பேசும்போது, “என்னுடைய பெற்றோர் எனக்கு சிவா என்று பெயர் வைத்தனர். ஆனால் கார்த்தி சாருடன் நான் இணைந்து பணியாற்றிய படம் எனக்கு முன்பாக சிறுத்தை என்கிற பெயரையும் சேர்த்து கொடுத்துவிட்டது. அதனால் அவர் எப்போதுமே எனக்கு ஒரு ஸ்பெஷலானவர் தான். அவர் அந்த அளவிற்கு ஒரு நேர்மையான உன்னதமான மனிதர். அவருடைய தொழிலுக்கு எப்போதுமே அவர் உண்மையாகவே இருந்திருக்கிறார். அவருடைய நிறைய விஷயங்களை தனது தொழிலுக்காகவே அர்ப்பணித்து இருக்கிறார். சிறுத்தை படப்பிடிப்பின் போது நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆனால் அவற்றையெல்லாம் அவர் அழகாக கையாண்டார். சிறுத்தை படத்தில் கார்த்தியை இயக்க ஒரு வாய்ப்பை கொடுத்ததற்காக ஞானவேல் ராஜா சாருக்கு நன்றி சொல்வதற்கு இந்த தருணத்தை பயன்படுத்திக் கொள்கிறேன்” என்று கூறினார்.