
'டாக்டர்' பட வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டான்’. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'லைக்கா ப்ரொடக்ஷன்ஸ்' தயாரித்துள்ள இப்படத்தை 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனம் வெளியிடுகிறது. மே மாதம் 13-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. ஏற்கனவே வெளியான இப்படத்தின் இரண்டு பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் ‘டான்’ படத்தின் மூன்றாம் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 'பிரைவேட் பார்ட்டி' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இப்பாடலை அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி பாடியுள்ளார்கள், சிவகார்த்திகேயன் வரிகள் எழுதியுள்ளார். சிவகார்த்திகேயனும் பிரியங்கா மோகனும் ஜாலியாக ஒரு குத்தாட்டம் போடுவது போல் இப்பாடல் அமைந்துள்ளது.