
டி.ராஜேந்தர் பொதுவாக எங்கு பேசினாலும் அவரது வசனங்களை வைத்து கலாய்த்து பதிவு செய்து மீம்ஸ்கள் போடுவது சமீபகாலங்களில் வழக்கமான ஒன்றாகவே மாறிவிட்டது. மேலும் அவர் வாயில் இசை வாசிப்பது, தலைமுடி ஆட்டுவது போன்ற விஷயங்களால் அவர் நிறைய கலாய்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக டி.ராஜேந்தர் கலந்து கொண்டுள்ளார். அப்போது அந்த நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு பேசிய வீடியோ ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அதில் சிம்பு தன் அப்பா டி.ராஜேந்தரை பற்றி பேசும்போது... "என் அப்பா மிகவும் சிறந்தவர். அவரிடம் நிறைய திறமைகள் உள்ளது. ஆனால், நிறைய பேர் அவரை வைத்து மீம்ஸ் உருவாக்கி கலாய்க்கிறார்கள். வாயில் இசை வாசிக்கிறார் என்று கலாய்க்கிறார்கள். உங்களால் அது முடியுமா, தலைமுடி ஆட்டுகிறார் என்கிறார்கள் இந்த வயசிலும் அவர் ஆட்டுகிறார். ஆனால் உனக்கு இந்த 20 வயசிலேயே முடி இல்லை. எந்த பெண்ணை பார்த்தாலும் உனக்கு ஏதாவது தோன்றும். ஆனால் ஒரே ஒரு பெண் தான் என்று வாழ்கிறார் என் அப்பா. நீ இப்போதே நிறைய போதைகளுக்கு அடிமையாகியிருப்பாய். ஆனால் அவருக்கு ஒரு கெட்ட பழக்கம் கூட கிடையாது. கிண்டல் செய்பவர்கள் எல்லாம் யார் என்று பார்த்தால் திறமை இல்லாதவன் தான் செய்கிறான். ஆனால் என் அப்பாவின் திறமையை அங்கீகரித்து மதித்தவர்களை நான் மதிக்கிறேன் வணங்குகிறேன்" என்று சிம்பு மனம் உருக பேசியதை பார்த்த டி.ராஜேந்தர் கண் கலங்கினார்.