Skip to main content

"பிரகாஷ் ராஜ், சிவராஜ்குமார் மன்னிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது" - காரணம் பகிர்ந்த சித்தார்த்

Published on 05/10/2023 | Edited on 05/10/2023

 

sidhdharth says Prakash Raj, Shivrajkumar apology cannot be accepted regards chiththa event issue

 

அருண் குமார் இயக்கத்தில் எடாகி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சித்தார்த், நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சித்தா'. கடந்த மாதம் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தெலுங்கில் நாளை (06.10. 2023) வெளியாகிறது. 

 

இதனிடையே கன்னடத்தில் வெளியானபோது, படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக பெங்களூரு சென்றிருந்த சித்தார்த்துக்கு காவிரி நதி நீர் பிரச்சனை காரணமாக கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். அது சர்ச்சையானதைத் தொடர்ந்து கன்னட மக்கள் சார்பாக நடிகர்கள் சிவராஜ்குமார், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்டனர். 

 

இந்த நிலையில் படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழா படக்குழு நடத்தியது. பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த சித்தார்த், கன்னட அமைப்பு எதிர்ப்பு தெரிவித்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்தார். அவர் பேசுகையில், "கடந்த 28 ஆம் தேதி தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டது. அன்றைக்கு எந்த ஊரிலும் பந்த் கிடையாது. அதனால் ஒரு இடத்தை காசு கொடுத்து புக் பண்ணி ஒரு தனியார் ஆடிட்டோரியத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினோம். எதுவுமே புரியாத அளவிற்கு திடீரென்று சில பேர் வந்து... என்ன பன்னாங்கன்னு எல்லாரும் பாத்திருப்பீங்க. இதில் முக்கியமான விஷயம் பத்தி நீங்க தெரிஞ்சிக்கணும், பொய்யான தகவல்கள் பரப்பப்படுகிறது. பந்த் அன்றைக்கு என்னுடைய சுயலாபத்துக்காக செய்தேன் என்று சொல்கிறார்கள். அப்படியெல்லாம் எதுவுமே கிடையாது. அதற்கு அடுத்த நாள் தான் பந்த் அறிவிக்கப்பட்டது. 

 

என் வேலையே நிறுத்த ஒரு சரியான காரணமும் யாரிடமும் கிடையாது. நாங்க எங்க பக்கம் நிஜமாகவே எந்த தப்பும் பண்ணவில்லை. அதன் பிறகு நடந்த விளைவுகள், படத்தை பற்றி யாருமே கேள்வி கேட்காமல் சம்பந்தமில்லாமல் அதை பற்றி கேட்கிறீர்கள். ஒரு வாரத்துக்கு அந்த சம்பவத்தை பற்றி பேசாமல் இருந்ததற்கு இது தான் காரணம். நீங்க இப்போது கேள்வி கேட்டுள்ளீர்கள், அதன் காரணத்தினால் தான் இப்போது பேசுகிறேன். அந்த சம்பவத்துக்கு பிறகு பெரிய மனிதர்கள் பெரிய மனதுடன் மன்னிப்பு கேட்டார்கள். அவுங்க ஊரில் எங்களை அவமதித்தது பிடிக்கவில்லை என சொல்லி எனக்கு ஆதரவு தரும் வகையில் சிவராஜ்குமார் சார், பிரகாஷ் ராஜ் சார் இருவரும் மன்னிப்பு கேட்டனர். அந்த மன்னிப்பை என்னால் ஏத்துக்க முடியாது. ஏனென்றால் எந்த தப்புமே அவர்கள் பண்ணவில்லை. அவர்கள் மன்னிப்பு கேட்க தேவையே இல்லை. ஆனால் அவர்கள் மன்னிப்பு கேட்டது ஒரு அழகான விஷயம். அவர்களுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது. நாங்கள் எல்லாரும் ஒரே நதியில் தான் குளிக்கிறோம். எல்லாமே ஒன்றுதான். 

 

அதேபோல் அந்த அரசியலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. என்னுடைய 20 வருஷத்துல அரசியலை பத்தி நான் பேசுனது கிடையாது. இப்பவும் அதற்கு அவசியமில்லை என கருதுகிறேன். இதையெல்லாம் தாண்டி மீண்டும் எந்த தயாரிப்பாளருக்கும் இது நடக்கக்கூடாது. இதிலிருந்து அரசியலை வெளியில் எடுத்துவிடுங்கள். என்னுடைய படத்திற்கு தான் நான் பிரச்சாரம் பண்ண முடியும். இவ்ளோ பெரிய பிரச்சனை நடக்கும் பொழுது எதுக்கு உன் வேலையை பண்ணுகிறாய் என்று கேட்டால்... ஒரு தயாரிப்பாளராக நான் என்ன பதில் சொல்வது. அதனால் என்னுடைய பொழப்பை மட்டும் தான் என்னால் பார்க்க முடியும். என் வயிற்றில் யாராவது உதைத்தால் அதை தப்பு என்று சொல்ல முடியும். 

 

தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கம் இதுவரை இந்த விவகாரம் குறித்து என்னிடம் எதுவும் பேசவில்லை. செய்தியாளர்கள் சந்திப்பில் கூட அவர்களிடம் கேள்வி முன்வைக்கப்பட்ட போது, அதற்கு சிவராஜ்குமார் மன்னிப்பு கேட்டுவிட்டாரே, அதனால் அதைப் பற்றி பேசத் தேவையில்லை என சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் பேசியிருக்க வேண்டும். இனிமேல் மீண்டும் ஒரு தமிழ் தயாரிப்பாளருக்கு இது நடக்கக் கூடாது. அதனால் அவர்களுக்கு இதை வேண்டுகோளாக வைக்கிறேன். 

 

சினிமா துறைக்கு சம்பந்தமே இல்லாதவர்கள் வந்து சினிமா துறையினர் மீது இப்படி நடந்து கொள்ளும் போது... அன்றைக்கு பத்து பேர் தான் பிரச்சனை பண்ணார்கள். கன்னட மக்களுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. கன்னட திரையுலகத்திற்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது. எந்த வித பிரச்சனையும் இல்லாத ஒரு விஷயம், கண்ணு பட்டுவிட்டதா என தெரியவில்லை. அன்றைக்கு அது நடந்தது. அதை வைத்து என்னுடைய படத்துக்கு விளம்பரப் படுத்த மாட்டேன். அது மாதிரி ஆளும் நான் கிடையாது. எனக்கு என்னுடைய படம் தான் முக்கியம்" என்றார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

2000-க்கும் மேல் ஆபாச வீடியோக்கள்? பென் டிரைவ் முழுவதும் பெண்கள்; சிக்கிய பாஜக கூட்டணி வேட்பாளர்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Controversial BJP alliance candidate and devegowda grandson for Over 2000 videos?

கர்நாடகா மாநிலத்தில், நடைபெறும் மக்களவைத் தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி, பா.ஜ.கவுடன் கூட்டணியில் இருக்கிறது. இந்த தேர்தலில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில், பாஜக 25 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 3 இடங்களிலும் போட்டியிடுகின்றன. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் முன்னாள் பிரதமர் தேவகவுடா அவரது மகன்கள் ரேவண்ணா, குமாரசாமி ஆகியோரைத் தொடர்ந்து தேவகவுடா பேரன்கள் நிகில் குமாரசாமி, பிரஜ்வால் ரேவண்ணா ஆகியோரும் தீவிர அரசியலில் உள்ளனர். இவர்களில், ஹாசன் தொகுதியில் எம்.பியாக உள்ள பிரஜ்வால் ரேவண்ணா, இந்த முறை பா.ஜ.க கூட்டணியில் போட்டியிட்டார். இவர், தேவகவுடாவின் பேரனும், முன்னாள் அமைச்சர் ஹெச்.டி.ரேவண்ணாவின் மூத்த மகனும் ஆவார். 

இதனால், இவர் போட்டியிடும் தொகுதியில் பா.ஜ.க கூட்டணி சார்பில் தீவிர பரப்புரை நடைபெற்று முதற்கட்டமாக 14 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. ஆனால், தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பு, பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருக்கும் ஆபாச வீடியோக்கள் இணையத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 300-க்கும் அதிகமான பெண்களுடன் பிரஜ்வல் ரேவண்ணா உல்லாசமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் ஹாசன் தொகுதி முழுவதும் காட்டுத் தீயாக பரவியது. அதுவும், ஹாசன் தொகுதி வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்ரல் 26 ஆம் தேதிக்கு முதல் நாளில் இருந்தே இந்த வீடியோக்கள் அத்தொகுதி முழுவதும் வாட்ஸ் அப்களில் வலம் வந்தன. இப்படிப்பட்ட நபருக்கா நீங்கள் ஓட்டுப் போடப் போகிறீர்கள்? என்ற வாசகத்துடன் இந்த ஆபாச வீடியோக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதில், அரசுத் துறையைச் சேர்ந்த சில பெண் அதிகாரிகளும் ஆபாச வீடியோவில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இது, கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து, சமூக ஊடகங்களிலும் பிரஜ்வல் ரேவண்ணா பெண்களுடன் இருக்கும் ஆபாச வீடியோ பரவ இந்தியா முழுவதும் இந்த சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது. இதனிடையே, அம்மாநில மகளிர் குழுவின் தலைவி நாகலட்சுமி சவுத்ரி, அந்த வீடியோ தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் சித்தராமையாவுக்குக் கடிதம் எழுதினார். அதைத் தொடர்ந்து, கர்நாடக முதல்வர் சித்தராமையா தன் எக்ஸ் பக்கத்தில், ‘பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோ குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க அரசு முடிவு செய்திருக்கிறது. அந்த வீடியோ கிளிப்களில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. கர்நாடக மாநில மகளிர் ஆணையம் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்குமாறு கேட்டுக் கொண்டது. அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, கர்நாடகவின் ஹோலநரசிப்பூர் காவல் நிலையத்தில் 4 பிரிவின் கீழ் பிரஜ்வல் ரேவண்ணாவின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், ஜே.டி.எஸ் கட்சியின் ஹாசன் வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது என கர்நாடக முதல்வர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. ஆபாச வீடியோ விவகாரம் மாநிலம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பெங்களூரில் இருந்து ஜெர்மனுக்கு தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த கையோடு பிரஜ்வல் ரேவண்ணா புறப்பட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால், பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆதரவாளர்கள் அந்த ஆபாச வீடியோக்கள் சித்தரிக்கப்பட்டது என கூறி வருகின்றனர். பதிலுக்கு, பிரஜ்வல் ரேவண்ணாவும் தனது புகழைக் கெடுக்கும் நோக்கில் ஆபாச வீடியோக்கள் பரப்பப்படுவதாக புகார் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Controversial BJP alliance candidate and devegowda grandson for Over 2000 videos?

ஆனால், பாஜக தரப்பு பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ குறித்து கருத்து ஏதும் தெரிவிக்க விரும்பவில்லை என கூறிவருவது சந்தேகத்தை கிளப்புவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. காங்கிரஸ் சார்பில் ஆபாச வீடியோ விவகாரத்தில் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய வேண்டும் என போராட்டமும் நடைபெற்று வருகிறது. முன்னதாக பென் டிரைவ் மூலமே பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச படம் பரப்பப் பட்டதாக தகவல் சொல்லப்படுகிறது. ஆனால், விரிவான விசாரணைக்கு பிறகே முழுப் பின்னணி தெரிய வரும். அந்த பென் டிரைவில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. இன்னும் வட கர்நாடகாவில் மக்களவைத் தேர்தல் முடியாத சூழலில் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ விவகாரம் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, பா.ஜ.கவைச் சேர்ந்தவர்களும், கூட்டணியில் உள்ளவர்களும் ஆபாச வீடியோக்களில் சிக்குவது குறிப்பிடத்தக்கது.

Next Story

தேவகவுடா மகன் மீது பாலியல் குற்றச்சாட்டு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Deve Gowda's son issue in karnataka 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இத்தகைய சூழலில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

Deve Gowda's son issue in karnataka 

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் அவரைக் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Deve Gowda's son issue in karnataka 

இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எச்.டி.ரேவண்ணா வீட்டில் பணியாற்றும் சமையலர் அளித்த புகாரின் பேரில் ரேவண்ணா மீது பாலியல் சீண்டல், மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஹோலேநர்சிபூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எச்.டி. ரேவண்ணாவின் மகன் பிரஜ்வால் மீது ஏற்கெனவே பாலியல் புகார் உள்ள நிலையில் தற்போது தந்தை மீதும் பாலியல் புகார் எழுந்துள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.