உலகளவில் இசைக் கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் நடைபெற்று வரும் 'கிராமி விருது' இந்த ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்துள்ளது. இந்த 66வது சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடல் ஆல்பம் உள்ளிட்ட பல பிரிவுகளில் பல்வேறு கலைஞர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் உலகின் சிறந்த ஆல்பம் (Best Global Music Album) பிரிவில் இந்தியாவின் சக்தி இசைக்குழு வென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் ‘திஸ் மொமெண்ட்’ ஆல்பத்திற்கு இந்த விருது கிடைத்துள்ள நிலையில் சங்கர் மகாதேவன், செல்வகணேஷ் விநாயக்ராம், கணேஷ் ராஜகோபாலன், ஜாகீர் உசேன் ஆகியோர் அடங்கிய இசைக்குழு இதில் பணியாற்றியுள்ளனர். இவர்களுக்கு பல்வேறு தரப்பினர் தற்போது வாழ்த்து கூறி வருகின்றனர்.
கடந்த வருடம் இந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்த ரிக்கி கேஜ், 'டிவைன் டைட்ஸ்' ஆல்பத்துக்காக சிறந்த ஆடியோ ஆல்பம் (Best Immersive Audio Album) என்ற பிரிவில் கிராமி விருது வென்றார் என்பது நினைவுகூரத்தக்கது.