Skip to main content

"அஜித் சார் வரச் சொன்னாரா, இல்லை நீயா கேட்டியா அப்பா?" - மூத்த நடிகர் பகிர்ந்த சுவையான சம்பவம்    

Published on 18/03/2019 | Edited on 18/03/2019

சென்ற வாரம் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மூத்த நடிகர் டெல்லி கணேஷ், அங்கிருந்தவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தனது சினிமா அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார். 'நேர்கொண்ட பார்வை' படப்பிடிப்பில் அஜித்துடன் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை அந்த மேடையில் அவர் கூறினார். 
 

ennul aayiram

 

நடிகர் டெல்லி கணேஷ் பேசியது... 
 

“அஜித் படப்பிடிப்பு இடைவேளையின் போது வந்து பேசுவார். நாங்கள் நிறைய பகிர்ந்து கொள்வோம். அப்படி பேசிக்கொண்டிருக்கும்போது நான் சொன்னேன்... "என் பையனை ஹீரோவாக வைத்து ஒரு படம் எடுத்தேன். மூன்று கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டது. அந்த படம் நல்லா இல்லை என்று யாராவது சொல்லியிருந்தால் கூட கவலைப்பட்டிருக்கமாட்டேன். ஆனால், அந்தப் படத்தை டிஸ்டிரிபியூட்டர்ஸ் மக்களிடம் கொண்டு சேர்க்கவேயில்லை. அதுதான் எனக்கு வருத்தம்" என்றேன். "உங்க பையன் நடிக்கிறாரா?" என்று கேட்டார். "இப்போ நீங்க ஒரு நிமிடம் ஃபீரியா இருக்கீங்களா?"னு கேட்டு அந்தப் படத்தோட ட்ரைலர் போட்டுக்காட்டினேன். அதை பார்த்துவிட்டு, "கூல்... உங்கள் பையன் நல்லா இருக்கிறார், நல்லாதான் நடிச்சிருக்கார். அவரை நான் பாக்கணுமே" என்றார். இதை என் மகனிடம் கால் செய்து சொன்னேன். அவன் என்னிடம், "அப்பா... என்னை வரச்சொல்லி அவரா சொன்னாரா, இல்லை நீயா கேட்டியாப்பா?" என்றான். "அவர்தான்டா கூப்பிட்டார், கிளம்பி வா" என்றேன்.

பின்னர், ரெண்டு, மூன்று நாட்கள் என் பையனும் படபிடிப்பில் அஜித் சாருடன் இருந்தான். அப்போது அவர் நிறைய மோட்டிவேஷன் செய்தார். என்னுடைய டிரைவர் அஜித்தின் மிகப்பெரிய ரசிகன் என்பதை சொன்னேன். அஜித்தே, அவரை அழைத்து 'நாம ஒரு ஃபோட்டோ எடுத்துக்கலாமா?' என்று கேட்டார். அஜித் கூட ஃபோட்டோ எடுத்த சந்தோஷத்தில் என் டிரைவர், 'சார் எனக்கு ஒரு மாச சம்பளமே வேணாம் சார், இந்த ஒரு ஃபோட்டோ போதும்' என்றான். இப்படி, அனைவரையும் மதிக்கும், அக்கறை காட்டும் பண்பு உள்ளவர் அஜித். என் பையனை சந்தித்த பிறகு என்னிடம் 'கண்டிப்பா இவர் நல்லா வருவார். அதுக்கு நாம் ஏதாவது செய்யலாம்' என்றார். இத்தனை ஆண்டுகள் சினிமாவில் இருந்திருக்கிறேன். எனக்காக இந்த வார்த்தை சொல்ல வேறெந்த நடிகரும் இல்லை"
 

இவ்வாறு நெகிழ்ச்சியுடன் நடிகர் டெல்லிகணேஷ் பேச, மாணவர்கள் உற்சாகக் குரல் எழுப்பினர். 

 


 

சார்ந்த செய்திகள்