
சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'(Tourist Family).மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் தயாரித்து வரும் இப்படத்தில் யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர். ஷான் ரோல்டன் இசையமைப்பில் இப்படம் உருவாகிறது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் முன்னதாக வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. டீசரில் இலங்கை தமிழில் அனைவரும் பேசியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது. பின்பு படத்தில் இருந்து இரண்டு பாடகள் லிரிக் வீடியோவுடன் வெளியாகியிருந்தது.
இப்படம் மே 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 23ஆம் தேதி இசையும் ட்ரைலரும் வெளியாகவுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.