Skip to main content

பேக் டூ சினிமா - சமந்தா கொடுத்த அப்டேட்

Published on 12/02/2024 | Edited on 17/03/2025
samantha return to cinema

சமந்தா சமீப காலமாக சினிமாவில் இருந்து விலகியிருந்தார். தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், அது பூரண குணமடைய தொடர்ந்து பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்டு வருகிறார். கடைசியாக விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்திருந்தார். தமிழில் விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தார்.  இப்போது கைவசம் 'சிட்டாடெல்' வெப் தொடர் வைத்துள்ளார். இதன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதையடுத்து டிராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளதாக கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தார். பின்பு சமீபத்தில் சிட்டாடெல் தொடரை பார்த்ததாகவும் தங்களுக்கு பிடித்ததாகவும் படக்குழுவுடன் இருக்கும் புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் மீண்டும் நடிப்பிற்கு வருவது குறித்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “இறுதியாக நான் மீண்டும் பணிக்கு திரும்புகிறேன். இந்த இடைப்பட்ட காலத்தில் நான் வேலை இல்லாமல் தான் இருந்தேன். ஆனால் நண்பருடன் இணைந்து உடல்நலம் குறித்த பாட்கேஸ்ட் ஒன்றை உருவாக்கியுள்ளேன். இதை எதிர்பார்க்கவில்லை. ஆனால் எனக்கு பிடித்தமான ஒன்று. அடுத்த வாரம் அது வெளியாகவுள்ளது. உங்களில் சிலருக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்