![samantha](http://image.nakkheeran.in/cdn/farfuture/T4UCexoPikseJzzuNU7IS9jWSCxjsrQhSgCZ-2rx6h8/1533347624/sites/default/files/inline-images/DaZYw5VUQAACWw0.jpg)
தெலுங்கு தேசத்தில் ராம்சரண் தேஜா, சமந்தா நடித்த ரங்கஸ்தலம் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வெளியான பத்து நாட்களில் சுமார் 150 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்திக் கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழு வெற்றி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகின்றனர். அப்போது ஒரு நிகழ்ச்சியில் இயக்குனர் சுகுமார் இப்படத்தில் இடம் பெற்ற முத்த காட்சி குறித்து சுவாரஸ்யமான தகவலை பகிரும்போது.... "இந்த படத்தில் ராம்சரண் - சமந்தா முத்தக்காட்சி ஒன்று இடம் பெற்றுள்ளது. முத்தக்காட்சியில் நடிக்க வேண்டும் என்று நான் சொன்னதும் இருவரும் தயங்கினர். பிறகு காட்சியின் முக்கியத்துவம் பற்றி எடுத்து சொல்லவே அப்படி நடிக்க இருவரும் ஒப்புக்கொண்டனர். பின்னர் ராம்சரண் தேஜாவுக்கு, சமந்தா முத்தம் கொடுப்பது போன்ற காட்சியை படமாக்கியபோது இருவரும் பலமுறை டேக் வாங்கியதால் அந்த காட்சி யதார்த்தமாக அமையவில்லை. மீண்டும் மீண்டும் அதை படமாக்கிய பிறகும் திருப்தி ஏற்படாததால், நேரம் போய்க்கொண்டே இருந்தது. இதை பார்த்த தயாரிப்பாளர் இந்த காட்சியை சீக்கிரம் படமாக்கி முடித்தால் உங்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு என்று கூறினார். இதையடுத்து நிலைமையை புரிந்து கொண்ட நான் சமந்தாவிடம் மீண்டும் காட்சியை உணர்வுபூர்வமாக விளக்க பத்து விநாடிகளில், சமந்தா, ராம்சரணுக்கு முத்தம் கொடுத்த காட்சி ‘ஓ.கே’ ஆகி விட்டது. இதற்கு தயாரிப்பாளரிடம் ரூபாய் பத்து லட்சம் பரிசு பெற்றேன்" என படக்குழுவினரிடம் தெரிவித்து மகிழ்ச்சி அடைந்ததை தெரிவித்தார்.