Skip to main content

டாக்டர் வேண்டாம், மலர் டீச்சர் போதும்! சாய் பல்லவியின் முடிவு

Published on 26/03/2018 | Edited on 27/03/2018
saipallavi


இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகும் கரு படத்தை முடித்த கையோடு ப்ரேமம் புகழ் நடிகை சாய்பல்லவி தற்போது சூர்யா ஜோடியாக என்.ஜி.கே படத்திலும் தனுஷ் ஜோடியாக மாரி 2 படத்திலும் நடித்து வருகிறார். இதையடுத்து மிஸ்கின் இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளார். இந்நிலையில் தனது டாக்டர் தொழிலை பற்றியும், சினிமா அனுபவம் குறித்தும் பேசுகையில்.... "சிறுவயதிலேயே நடனம் கற்றுக்கொண்டேன். முதன் முதலில் தாம்தூம் படத்தில் கங்கனா ரணாவத் தோழியாக நடித்தேன். பின் கஸ்தூரிமான் படத்திலும் மீரா ஜாஸ்மின் தோழியாக வந்தேன். அதன் பிறகு எனது தந்தை சினிமா நிரந்தர தொழில் இல்லை. கதாநாயகிகள் ஆறு ஆண்டுகள் மட்டுமே நிலைத்து இருக்க முடியும். அதன் பிறகு ஓரம் கட்டிவிடுவார்கள் என்றார்.பிறகு படிப்புதான் முக்கியம் என்று சொல்லி ஜார்ஜியாவுக்கு டாக்டருக்கு படிக்க அனுப்பி விட்டார். அங்கு படித்துக் கொண்டு இருந்தபோது தான் ‘பிரேமம்’ பட வாய்ப்பு வந்தது. படிப்புக்கு பாதிப்பு வராமல் விடுமுறையில் மட்டும் நடிக்கும்படி பெற்றோர்கள் தெரிவித்தனர். அந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. இதனால் முழு நேர நடிகையாகி விட்டதால் டாக்டர் வேலையை விட்டு விட்டேன். ஒரே நேரத்தில் இரண்டு படகுகளில் சவாரி செய்ய கூடாது. அதுவும் மருத்துவ தொழில் உயிர்கள் சம்பந்தப்பட்டது என்பதால் நடித்துக்கொண்டு டாக்டர் வேலை பார்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இதனால் எனது பெயருக்கு பின்னால் கூட எம்.பி.பி.எஸ் பட்டத்தை சேர்த்துக்கொள்ளவில்லை" என்றார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

'லிவிங் டூகெதர் உறவு எனக்கு தேவையில்லை' - சாய்பல்லவி அதிரடி !

Published on 30/12/2018 | Edited on 30/12/2018
saipallavi

 

 

'மாரி 2' படத்தை தொடர்ந்து சூர்யாவின் 'என்.ஜி.கே' படத்தில் நடித்து வரும் சாய் பல்லவி தன் வாழ்க்கை குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியபோது...."நான் புத்தகங்கள் மற்றும் சினிமாவை காதலித்துக் கொண்டிருக்கிறேன்.என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை லிவிங் டூகெதர் உறவு எனக்கு தேவையில்லை. இப்படி சொல்வதால் அதற்கு எதிராக இருக்கிறேன் என்பதல்ல. இது எல்லாமே அவரவர்களின் செயல்பாடுகளை பொறுத்தது. நான் திருமணம் செய்துகொண்டு வாழ்வதையே விரும்புகிறேன்" என்றார்.

 

 

Next Story

மாரி 2 படத்தில் தனுஷ் எனக்குப் ப்ரபோஸ் பண்றார்!

Published on 03/12/2018 | Edited on 03/12/2018

அறந்தாங்கி நிஷா... நமக்கு காமெடியனாக அறிமுகமான இவர் இப்போது நாயகியாகியிருக்கிறார், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தன் தொடர் களப்பணியால். கஜா புயல் தாக்கிய பகுதிகளில் தன் அனுபவத்தையும் பாதிப்பின் அளவையும் நம்முடன் பகிர்கிறார். அடுத்த தான் நடித்த மாரி-2 படத்தின் சுவாரசிய சம்பவங்களையும் கேட்டறிந்தோம்.