
நடிகர் விக்ரம் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் துருவநட்சத்திரம் மற்றும் ஹரி இயக்கத்தில் சாமி ஸ்கொயர் படங்களில் நடித்து வருகிறார். இதில் சாமி படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் சாமி ஸ்கொயர் படம் தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. இதில் விகாரமுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வில்லனாக பாபி சிம்ஹா நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகும் இப்படத்தின் முதல் பாகத்தில் நடித்த கோட்டா ஸ்ரீனிவாசராவ் மகனாக பாபிசிம்ஹா நடித்து வருகிறார். இந்நிலையில் படத்தில் நடிகர் விக்ரம் அப்பா, மகன் என இரு வேடத்தில் நடிக்கிறார். முதல் பாகத்தில் ஆறு சாமி கதாபாத்திரத்தில் நடித்த விக்ரம் இப்படத்தில் ஆறு சாமி மற்றும் அவரது மகன் என இரு வேடங்களில் நடிக்கிறார். பெருமாள் பிச்சை மகனுக்கும், ஆறு சாமி விக்ரம் மகனுக்கும் நடக்கும் பிரச்சனையை மையமாக வைத்து இப்படத்தை ஹரி உருவாக்கி வருகிறார். மேலும் அப்பா விக்ரம் ஜோடியாக நடிக்க திரிஷாவிடம் இன்னமும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.