Skip to main content

"புலியை புடிக்கணும்ன்னா வேட்டைக்காரன் வேணும்"- ரசிகர்களை மிரட்டும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் ட்ரைலர்!

Published on 09/12/2021 | Edited on 09/12/2021

 

rrr movie trailer released

 

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' படங்கள் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றன. இப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமௌலி பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இருவரையும் வைத்து 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தை இயக்கிவருகிறார். இதில் ஆலியா பட், சமுத்திரக்கனி, பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

 

ad

 

பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ளது. 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு, இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டிவருகிறது. ஏற்கனவே ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

 

இந்நிலையில் படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், விறுவிறுப்பன ஆக்சன் காட்சிகளில் ராம் சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் மிரட்டியுள்ளனர். சுதந்திர போராட்ட கதையையே மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் ட்ரைலர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்