Skip to main content

"பிளாஸ்மா தானத்திற்கு 3 வாரங்கள் காத்திருக்க சொல்லியிருக்கிறார்" - ராஜமௌலி அறிவிப்பு!

Published on 13/08/2020 | Edited on 13/08/2020
vfSF

 

 

இந்தியாவில் கரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. பெரிய திரை பிரபலங்களும், மாநில மற்றும் மத்திய அமைச்சர்களும் கூட இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில்தான் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆரத்யா உள்ளிட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்னர். மேலும் பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலிக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. 

 

இதையடுத்து அவரும், அவர் குடும்பத்தினரும் மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டுனர். மேலும் கரோனா குணமாகி நோய் எதிர்ப்பு சக்தி உருவானதும், பிளாஸ்மா தானம் செய்ய காத்திருப்பதாக ராஜமௌலி அறிவித்திருந்தார். இந்நிலையில் தன் தனிமைப்படுத்தப்பட்ட நாட்கள் முடிந்துள்ளதாக ராஜமௌலி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்...

 

"நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டு 2 வாரங்கள் முடிந்தது! அறிகுறிகள் இல்லை. சம்பிரதாயம் பொருட்டு மீண்டும் சோதித்தோம்... எங்கள் அனைவருக்கும் கரோனா இல்லை என சோதனை முடிவில் தெரியவந்துள்ளது... பிளாஸ்மா தானத்திற்கு போதுமான ஆன்டிபாடிகளை நாங்கள் உருவாக்கியுள்ளோமா என்று பார்க்க 3 வாரங்கள் காத்திருக்க வேண்டும் என்று மருத்துவர் கூறியுள்ளார்!" என பிளாஸ்மா தானம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்