Skip to main content

பத்ம ஸ்ரீ விருதை பெற்ற பழம்பெரும் தமிழ் நடிகை சௌகார் ஜானகி

Published on 28/03/2022 | Edited on 28/03/2022

 

President Ram Nath Kovind presents PadmaShri award actress chaukar janaki

 

பழம்பெரும் நடிகையான  சௌகார்  ஜானகி தமிழ்  மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட தென்னிந்திய  மொழி படங்களில் நடித்து பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார். 50 வருடங்களுக்கு மேல் திரை துறையில் நடித்து வரும்  சௌகார்  ஜானகி தற்போது கூட சில படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரது கலைச்சேவையை பாராட்டி மத்திய அரசு  சமீபத்தில் பத்ம ஸ்ரீ விருதை அறிவித்தது.

 

இந்நிலையில் டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் இன்று (28.3.2022) நடைபெற்று வரும் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடிகை சவுகார் ஜானகிக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இவ்விருதை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்க பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி பெற்றுக்கொண்டார். இவருடன் சேர்த்து தமிழகத்தை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் எஸ் தாமோதரன், பிரபல தவில் இசைக் கலைஞர் கொங்கம்பட்டு ஏ. வி முருகன், மருத்துவர்  வீராசாமி சேஷய்யா  உள்ளிட்டோருக்கும் இவ்விழாவில் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்