Skip to main content

கௌரி லங்கேஷ் நினைவு தினம் - உறுதியளித்த பிரகாஷ் ராஜ்

Published on 05/09/2024 | Edited on 05/09/2024
prakash raj about gowri langesh

பத்திரிகையாளரும், சமூக செயற்பாட்டாளருமான கௌரி லங்கேஷ் கடந்த 2017 அவரது வீட்டில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் தொடர்ந்து இந்துத்துவா அமைப்பிற்கு எதிராகவும் பிரதமர் மோடியின் ஆட்சிக்கு எதிராகவும் குரல் கொடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நவீன்குமார், கௌரி லங்கேஷுடன் இணைந்து செயல்பட்ட நடிகர் பிரகாஷ் ராஜையும் கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டதாகப் பரபரப்பு வாக்குமூலத்தை விசாரணையில் கூறியிருந்தார். இதையடுத்து கௌரி லங்கேஷ் நண்பரான பிரகாஷ் ராஜ், தொடர்ந்து பிரதமர் மோடியையும் பா.ஜ.க.அரசையும் கடுமையாக விமர்சித்து வந்தார். இன்றளவும் தொடர்கிறார்.

இந்த நிலையில் கௌரி லங்கேஷின் நினைவு தினமான இன்று பிரகாஷ் ராஜ், உருக்கமுடன் ஒரு பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “கௌரியை நாங்கள் மிஸ் செய்கிறோம். ஆனால் “உன்னை நாங்கள் புதைக்கவில்லை, விதைத்தோம். நீ ஒரு உத்வேகம். உன் குரலை ஒருபோதும் தவறவிட மாட்டோம் என உறுதியளிக்கிறோம்” என குறிப்பிட்டு கௌரி லங்கேஷுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.  

சார்ந்த செய்திகள்