![Poster published by 50 celebrities simultaneously; Viral on the Internet](http://image.nakkheeran.in/cdn/farfuture/M-Vn1d_HWdLgvssbOMNTGZhfapmLunznYSbxsCGJ0E4/1650547080/sites/default/files/inline-images/Untitled-10_0.jpg)
தமிழ் சினிமாவில் 'பாய்ஸ்' படத்தின் மூலம் அறிமுகமான பரத், 'செல்லமே', 'சேவல்', காதல்', எம் மகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக நடுவண் படம் வெளியானது. இந்த படம் 12வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழா 2022-ல் தேர்வானது.
இந்நிலையில் பரத்தின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. பரத்துக்கு இப்படம் 50-வது படம் என்பதால் இதனை கொணடாடும் விதமாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஒரே நேரத்தில் மோகன் லால், ஆர்யா உள்ளிட்ட 50 திரை பிரபலங்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். படத்திற்கு 'லவ்' என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. இப்படத்தில் கதாநாயகியாக வாணி போஜன் நடிக்கிறார். ஆர்.பி பாலா தயாரித்து இயக்கும் இப்படத்திற்கு ரோனி ரபேல் இசையமைக்கிறார். இப்படத்தின் போஸ்டர் தற்போது பலரின் கவனத்தை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.