![pa.ranjith speech at Natchathiram Nagargirathu audio launch](http://image.nakkheeran.in/cdn/farfuture/JCIz5hz4a1_JgixDhHUEHdn-KIooLWnXV68bmx-AGFc/1661236598/sites/default/files/inline-images/218_4.jpg)
பா.ரஞ்சித், 'விக்டிம்' என்ற ஆந்தாலஜி படத்தை தொடர்ந்து தற்போது 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் காளிதாஸ் ஜெய்ராம், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'யாழி ஃபிலிம்ஸ்' மற்றும் 'நீலம் ப்ரொடக்ஷன்ஸ்' இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு தென்மா இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினரோடு வெங்கட் பிரபு, வெற்றிமாறன் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டு பேசினர்.
இந்த விழாவில் பா.ரஞ்சித், தனது திரைத்துறை அனுபவங்களை பற்றி பேசிக்கொண்டிருந்த நிலையில் அவரது அம்மாவை மேடையில் ஏற்றி எல்லாருக்கும் அறிமுகப்படுத்தினார். மேலும், "சென்னைக்கு அருகில் தான் என் ஊர். நான் சென்னைக்கு கிளம்பும் போது 'ஜெய்ச்சிட்டு வா' என சொல்லி வழியனுப்பினார் அம்மா. இப்போது நான் ஜெய்ச்சிட்டு இருக்கேன் என நினைக்கிறன்" என குறிப்பிட்டு நெகிழ்ச்சியுடன் சில நிகழ்வுகளை பகிர்ந்தார். பா.ரஞ்சித் பேசுகையில் மேடையில் நின்றுகொண்டிருந்த அவரது அம்மா கண்கலங்கினார். பின்பு அம்மாவை பா.ரஞ்சித் சமாதானப்படுத்தினார் .