Skip to main content

'எனக்கும், ஆரவ்வுக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தது' - மனம் திறந்த ஓவியா 

Published on 04/01/2019 | Edited on 04/01/2019
oviya

 

 

'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் நட்பை வளர்த்து வரும் ஆரவ் மற்றும் ஓவியா விரைவில் திருமணம் செய்யப் போவதாக சமீபத்தில் வெளியான செய்தி குறித்து ஓவியா பேசியபோது.... ''ராஜ பீமா' படத்தில் நான் ஓவியாவாக ஒரு கவுரவ வேடத்தில் நடிக்கிறேன். நானும் ஆரவ்வும் ஆடிய பாடலை, ஆரவ்தான் பாடி இருக்கிறார். என்னை புகழ்ந்து எழுதப்பட்டுள்ள பாடல் அது. ‘பிக்பாஸ்’ சமயத்துல் எனக்கும், ஆரவ்வுக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தது. இப்போது நாங்கள் சமாதானமாகி விட்டோம். எனக்கும் ஆரவ்க்கும் திருமணம் ஆகிவிட்டது, லிவிங் டு கெதர்ல வாழ்கிறோம் என பல்வேறு வதந்திகள் வருகிறது. அவை எல்லாமே பொய். ஆரவ் என் நண்பர், எனக்கு ஆதரவாக இருக்கிறார். தவிர எனக்குக் கல்யாணத்தில் நம்பிக்கை கிடையாது. ஆனால் வாழ்க்கை நம்மை எங்கே கொண்டுபோய்ச் சேர்க்கும் என்று தெரியாது. நான் சின்ன வயதில் இருந்தே சுதந்திரமாக வளர்ந்த பெண் எனபதால் கல்யாணம் எனக்கு எந்தவிதத்துல் செட் ஆகும் என்று தெரியவில்லை" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்