‘ஒத்த செருப்பு’ என்ற வித்தியாசமான படத்தை இயக்கி பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தார் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன். படம் முழுவதும் தனி ஒருவராகத் திரையில் தோன்றி பார்த்திபன் நடித்த இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும், சென்ற ஆண்டுக்கான தேசிய விருதை இப்படம் தட்டிச் சென்றது. மேலும் பார்த்திபனின் இந்த முயற்சி, ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பெற்றது மட்டுமில்லாமல், பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றது. இப்படத்தின் தமிழ் மொழி வெற்றியை தொடர்ந்து நடிகர் அபிஷேக் பச்சனை வைத்து இந்தியில் ரீமேக் செய்து வருகிறார்.
இந்நிலையில் ஒத்த செருப்பு திரைப்படம் இந்தோனேசிய 'பஹாசா' மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் தனது ட்விட்டர் பதிவின் மூலம் உறுதி செய்துள்ளார். மேலும் இந்தோனேஷியா- பஹாஸா மொழியில் ரீமேக் செய்யப்படும் முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை ஒத்த செருப்பு திரைப்படம் பெற்றுள்ளது.
நண்பகல்
— Radhakrishnan Parthiban (@rparthiepan) February 17, 2022
வெண்பொங்கல்
வியாபாரம்
சூடுபுடிக்குதாம்! pic.twitter.com/uFPg4A4nPY