உலக அளவில் திரைத்துறையின் உயரிய விருதுகளில் ஒன்றான ஆஸ்கர் விருதானது சிறந்த படம், நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 2023ம் ஆண்டின் 95வது ஆஸ்கர் விருதுகள் இன்று காலை முதல் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது. இதில் இந்தியாவின் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடல் பிரிவிலும், 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' படம் சிறந்த ஆவணக் குறும்படம் பிரிவிலும் ஆஸ்கர் விருது வென்று சாதனை படைத்துள்ளன. முதன்முறையாக இந்திய மொழி சார்ந்த படங்கள் ஆஸ்கர் விருதை வென்றுள்ளன.
இந்த 95வது ஆஸ்கர் விருது விழாவில் வெற்றி பெற்ற படங்களின் முழுப்பட்டியல் பின்வருமாறு...
சிறந்த நடிகர் - பிரெண்டன் ஃப்ரேசர் ( The Whale )
சிறந்த நடிகை - மிஷெல் யோ ( எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்)
சிறந்த துணை நடிகர் (Best Supporting Actor) - கே ஹுய் குவான் ( எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்)
சிறந்த துணை நடிகை (Best Supporting Actress) - ஜேமி லீ கர்டிஸ் (எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்)
சிறந்த இயக்குநர் - க்வான் மற்றும் டேனியல் ஷீனெர்ட் (எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ், All Quiet on the Western Front [Germany])
சிறந்த படம் (Best Picture) - எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere All At Once)
சிறந்த சர்வதேச படம் (Best International Feature Film) - ஆல் க்வைட் ஆன் த வெஸ்டர்ன் ஃப்ரண்ட், [All Quiet on the Western Front (Germany)]
சிறந்த ஆவணப்படம் (Best Documentary Feature Film)- நவல்னி (Navalny)
சிறந்த ஆவணப்பட குறும்படம் (Best Documentary Short Film) - தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் (The Elephant Whisperers)
சிறந்த அனிமேஷன் படம் (Best Animated Feature Film) - கில்லர்மோ டெல் டோரோவின் பினோச்சியோ (Guillermo del Toro’s Pinocchio)
சிறந்த அனிமேஷன் குறும்படம் (Best Animated Short Film) - தி பாய், தி மோல், தி ஃபாக்ஸ் அண்ட் தி ஹார்ஸ் (The Boy, the Mole, the Fox, and the Horse)
சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் (Best Live Action Short) - ஆன் ஐரிஷ் குட்பை (An Irish Goodbye)
சிறந்த அசல் திரைக்கதை (Best Original Screenplay) - டேனியல் குவான் மற்றும் டேனியல் ஷீனெர்ட் (எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் )
சிறந்த தழுவல் திரைக்கதை (Best Adapted Screenplay) - சாரா போலே ( Women Talking)
சிறந்த அசல் பாடல் (Best Original Song) - நாட்டு நாட்டு (ஆர்.ஆர்.ஆர்)
சிறந்த ஒலி (Best Sound) - மார்க் வீங்கார்டன், ஜேம்ஸ் எச். மாதர், அல் நெல்சன், கிறிஸ் பர்டன் மற்றும் மார்க் டெய்லர் (Top Gun: Maverick)
சிறந்த ஒளிப்பதிவு (Best Cinematography) - ஜேம்ஸ் ஃப்ரெண்ட் தேர்வு (ஆல் க்யட் ஆன் த வெஸ்டர்ன் ஃப்ரண்ட், All Quiet on the Western Front)
சிறந்த படத்தொகுப்பு (Best Film Editing) - எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் (Best Visual Effects) - ஜோ லெட்டரி, ரிச்சர்ட் பனேஹாம், எரிக் சைண்டன் மற்றும் டேனியல் பாரெட் ( அவதார்: தி வே ஆஃப் வாட்டர்)
சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் (Best Makeup and Hairstyling) - தி வேல் (The Whale)
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு (Best Production Design) - கிறிஸ்டியன் எம். கோல்ட்பெக் மற்றும் எர்னஸ்டின் ஹிப்பர் ( ஆல் க்வைட் ஆன் தி வெஸ்டர்ன் ஃப்ரண்ட்,[All Quiet on the Western Front])
சிறந்த ஆடை வடிவமைப்பு (Best Costume Design) - ரூத் கார்ட்டர் ( பிளாக் பாந்தர்: வகாண்டா ஃபாரெவர், [Black Panther: Wakanda Forever])
சிறந்த அசல் பின்னணி இசை (Best Original Score) - ஆல் கொய்ட் ஆன் தி வெஸ்டர்ன் ஃப்ரண்ட் (All Quiet on the Western Front).