![Natchathiram Nagargiradhu movie trailer releasing tomorro](http://image.nakkheeran.in/cdn/farfuture/hw3If6bmzmNGAZbGBgwtCdBV-suxNO0z2dfnlJ4t19Y/1660824218/sites/default/files/inline-images/1620.jpg)
பா.ரஞ்சித், 'சார்பட்டா பரம்பரை' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் காளிதாஸ் ஜெய்ராம் கதாநாயகனாக நடிக்க, துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். 'யாழி ஃபிலிம்ஸ்' மற்றும் 'நீலம் ப்ரொடக்ஷன்ஸ்' இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு தென்மா இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க காதல் படமாக உருவாகி வரும் இப்படம் வரும் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படம் வெளியாக இன்னும் ஓரிரு வாரங்களே இருக்கும் நிலையில் படத்தின் டீசரோ அல்லது ட்ரைலரோ இதுவரை வெளியாகவில்லை. இதனைத்தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இது குறித்து கேள்வி எழுப்பி வந்த நிலையில் படக்குழு தற்போது ட்ரைலர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நட்சத்திரம் நகர்கிறது படத்தின் ட்ரைலர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.