
ஆர்யா, கௌதம் ராம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மிஸ்டர்.எக்ஸ்’. இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க விஷ்ணு விஷாலை வைத்து எஃப்ஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இயக்கி வருகிறார். திபு நிபுணன் தாமஸ் இசையமைக்கும் இப்படத்தின் பணிகள் 2023ஆம் ஆண்டில் இருந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. டீசரின் ஆரம்பத்தில் இந்திய உளவுத்துறை வீரர்களின் வாழ்க்கை மற்றும் தியாகங்களில் உருவான கதை என குறிப்பிடப்பட்டுள்ளது. பின்பு நம் நாட்டின் அணுக்கரு சாதனம் ஒன்று தொலைந்து போனதாகவும் அது தற்போது எதிரிகளுக்கு தெரிந்துவிட்டதாகவும் மஞ்சு வாரியர் பின்னணியில் சொல்கிறார். பிறகு அந்த சாதனத்தை தடுத்து நிறுத்தாவிட்டால் இங்கு ஒரு அட்டாக் நடக்கலாம் என அச்சப்படும் அரசாங்கம், அதை தடுக்க ஒரு உளவாளி டீமை அணுகுகிறது. அந்த டீமில் ஆர்யா, கௌதம் ராம் கார்த்திக், சரத்குமார் இருப்பதாக காட்டப்படுகிறது.
இறுதியில் இந்த டீம் அந்த அணுக்கரு சாதனத்தை கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதை ஆக்ஷன் கலந்த த்ரில்லர் ஜானரில் சொல்லியுள்ளதாக ட்ரெய்லர் அமைந்துள்ளது. இப்படம் குறித்த ரிலீஸ் அப்டேட்டும் ட்ரெய்லரில் இல்லை. விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.