என்.ஐ.ஏ. சட்டத்திருத்தத்தை நிறைவேற்றிய பாஜக அரசு, அடுத்து சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டத்தையும் திருத்த மசோதாவைத் தாக்கல் செய்தது.
இந்த மசோதாவை எதிர்த்து மேற்குவங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மக்களவையில் ஆவேசமாக பேசினார். அப்போது அவர்,
“உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான படேல் அமர்ந்த இடத்தில் அமர்ந்திருக்கிறார். மோடி அரசு படேலுக்கு உயரமான சிலை வைத்தால் மட்டும் போதாது. அவர் ஒன்றுபடுத்திய இந்தியாவை பிளவுபடுத்தாமல் இருக்க வேண்டும். இப்போது கொண்டுவந்துள்ள சட்டத்திருத்தத்தின்கீழ் அரசுக்கு பிடிக்காத ஒரு நபரை பயங்கரவாதி என்று கைது செய்து சிறையில் அடைக்க முடியும். அதாவது அரசை ஆதரிப்போர் கடவுளர்களாகவும், எதிர்ப்போர் சாத்தான்களாகவும் கற்பிக்க முடியும். அதாவது, எதிர்க்கட்சி தலைவர்கள், மனித உரிமை ஆதரவாளர்கள், சிறுபான்மையோர், பாஜக அரசு முயற்சிக்கும் ஒரே இந்தியா ஒரே மொழி போன்ற கோட்பாடுகளை எதிரப்போரை தேச விரோதிகளாக முத்திரை குத்த முடியும்” என்றார்.