தேசிய ஊரடங்கு உத்தரவு நான்காம் கட்டத்தை எட்டியுள்ளது. இம்முறை பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் சில தளர்வுகளுடன் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே திரைப்படங்களில் இறுதிக்கட்ட பணிகளை அரசு அளித்துள்ள நிபந்தனைகளை ஏற்று நடத்தவும், சின்னத்திரைக்கும் சில நிபந்தனைகளுடன் ஷூட்டிங் நடைபெறவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊரடங்கு தொடங்கியதிலிருந்து ட்விட்டரில் மக்களுக்கு கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். தற்போது மாறியிருக்கும் நிலை குறித்து மக்களுக்கு வீடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
அதில், "நாம் சகஜ நிலைக்குத் திரும்புகிறோம். மெதுவாக, ஆனால் கட்டாயமாக. இப்படியான சூழலில் முகக்கவசம் அவசியம். நீங்கள் எப்போது வெளியே சென்றாலும் முகக்கவசம் அணியுங்கள். நம்மையும், மற்றவர்களையும் பாதுகாக்க நாம் செய்யக்கூடிய குறைந்தபட்ச செயல் அதுவே. அது பார்க்க வித்தியாசமாகத் தெரியலாம், ஆனால் அதுதான் இந்த நேரத்தில் தேவை.
நாம் அதற்குப் பழகிக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு அடியாக எடுத்து வைப்போம். புது சகஜ நிலைக்கு ஏற்றவாறு மாறுவோம். மீண்டும் வாழ்க்கைப் பயணத்தைத் தொடருவோம். முகக்கவசம் அணிவது எனக்கு நன்றாகத்தான் இருக்கிறது. உங்களுக்கு?" என்று தெரிவித்துள்ளார்.