Skip to main content

நடிகை மீரா மிதுனுக்கு சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு !

Published on 17/12/2021 | Edited on 17/12/2021

 

madras court summon actress meera mithun

 

பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டதாக நடிகை மீரா மிதுனுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தன. இந்தப் புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடைச் சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

 

இந்த வழக்கு தொடர்பாக கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், கடந்த 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இதையடுத்து  மீரா மிதுன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.  இதனைத்தொடர்ந்து கடந்த 22 ஆம் தேதி நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை அமர்வு நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. 

 

இந்நிலையில் பட்டியலினத்தவரை அவதூறாக பேசிய வழக்கின் குற்றப்பத்திரிகை நகல் பெறுவதற்கு நடிகை மீரா மிதுன் இன்று ஆஜராகவில்லை என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து நடிகை மீரா மிதுன் ஜனவரி 11ஆம் தேதி மீண்டும் ஆஜராகும்படி சம்மன் அனுப்ப சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்