Skip to main content

நாம் நினைப்பதை விட கார்ப்பரேட்கள் கொடூரமானவை - கார்த்திக் சுப்புராஜ் கண்டனம் 

Published on 24/05/2018 | Edited on 24/05/2018
karthik subburaj


தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி நேற்று நடந்த 100வது நாள் போராட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்து கலவரமாக மாறியது. இதனையடுத்து, போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் சுட்டதில் 13 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் இந்த சம்பவத்தால் கடும் அதிர்ச்சி அடைந்த பல்வேறு தரப்பினர் தமிழக அரசுக்கு எதிராக கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்துக்கு  ரஜினி, கமல், விஷால், சத்யராஜ்  உட்பட பல திரையுலக பிரபலங்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும், வீடியோ பதிவாகவும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்ற நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்.... "தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது வேதனையளிக்கிறது. நமது அரசு மற்றும் ஆட்சியாளர்கள் மீது பயம் வருகிறது. சில கார்ப்பரேட் நிறுவனங்கள் நாம் நினைப்பதை விட ரொம்ப கொடூரமானவயாக இருக்கின்றன" என பதிவிட்டுள்ளார்.
 

சார்ந்த செய்திகள்