நந்தா பெரியசாமி இயக்கத்தில் ஜி.பி.ஆர்.கே. சினிமாஸ் தயாரிப்பில் சமுத்திரக்கனி, அனன்யா நடித்துள்ள படம் திரு.மாணிக்கம். இப்படத்தில் நாசர், தம்பி ராமையா, பாரதிராஜா, கருணாகரன், இளவரசு போன்ற நடிகர் பட்டாளம் நடித்துள்ள நிலையில் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்த படம் தமிழ்நாடு மற்றும் கேரளா இரண்டிற்கும் இடையில் குமுளி என்ற இடத்தில் படமாக்கப்பட்டுள்ளது.
இந்த படம் நாளை(27.12.2024) திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படம் வெற்றி பெற பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இப்படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “திரு.மாணிக்கம் படத்தைப் பார்த்தேன். ஒரு தனித்துவமான கதையை உணர்ச்சிகரமான குடும்ப ட்ராமாவாகவும் ரன் சேஸ் த்ரில்லராகவும் உருவாக்கப்பட்டுள்ளது. சமுத்திரக்கனி சார் மற்றும் லெஜண்ட் பாரதிராஜா சார் ஆகியோர் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர்.
பாக்ஸ் ஆபிஸ் வெற்றிக்கு நந்தா பெரியசாமி, லிங்குசாமி மற்றும் அனைத்து நடிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.