Skip to main content

“பிளாக் பஸ்டர் வெற்றி” - ‘விடாமுயற்சி’ குழுவினருக்குப் பிரபல இயக்குநர் வாழ்த்து

Published on 06/02/2025 | Edited on 06/02/2025
karthick subburaj about ajith vidaamuyarchi

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் விடாமுயற்சி. இபப்டத்தில் கதாநாயகியாக த்ரிஷா மற்றும் வில்லன்களாக அர்ஜூன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லைகா தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் இன்று(06.02.2025) வெளியாகியுள்ளது. 

இரண்டு படங்களுக்குப் பிறகு அஜித் படம் வெளியாகியுள்ளதால் அவரது ரசிகர்கள் வழக்கம் போல் திரையரங்கின் வளாகத்திற்கு முன் பேனர்கள், மேளதாளம், பட்டாசு என கொண்டாடி படத்தை வரவேற்றனர். இவர்களோடு முதல் நாள் முதல் காட்சியை த்ரிஷா, அனிருத், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், ஆரவ், அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பிரபலங்கள் பார்த்து மகிழ்ந்தனர்.  

இந்த நிலையில் இப்படக்குழுவினருக்கு கார்த்திக் சுப்புராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஒரு சுவாரஸ்யமான ஆக்‌ஷன் த்ரில்லர். தொழில்நுட்ப ரீதியாக சிறப்பாக உருவாக்கப்பட்ட சூப்பர் ஆக்‌ஷன் காட்சிகள், அஜித்குமாரின் அருமையான நடிப்பு மற்றும் த்ரிஷா, அர்ஜூன் உள்ளிட்ட மொத்த நடிகர் நடிகைகளும் சூப்பர். த்ரில்லர் ஜானரில் உண்மையாக கொடுத்ததற்குப் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். பாக்ஸ் ஆபிஸில் பிளாக் பஸ்டர் வெற்றி பெற வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்