இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'விக்ரம்'. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். மேலும் இப்படத்தின் வசூல் 300 கோடியைத் தாண்டியுள்ளது. இனி வரும் காலங்களில் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கப்படும் எனத் தெரிகிறது.
இந்நிலையில் விக்ரம் படத்தின் வசூல் தமிழ்நாட்டில் பாகுபலி 2 படத்தின் வசூலை முறியடித்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி விக்ரம் படத்தின் மொத்த வசூல் 300 கோடியை தாண்டியுள்ள நிலையில் அதில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.150 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது பாகுபலி 2 படத்தின் வசூலை முறியடிதுள்ளதாக கூறப்படுகிறது. சமீபகாலமாக துவண்டு கிடந்த தமிழ் சினிமாவை விக்ரம் படம் தூக்கி நிறுத்தியுள்ளதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகிறது.