சிறந்த குழந்தைகள் ஆல்பம் பிரிவில் கலர்புல் வேர்ல்ட் இசைத் துறையில் பணியாற்றும் கலைஞர்களுக்கான உயரிய விருதாக கருதப்படும் கிராமி விருது ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான 64 வது கிராமி விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று. 86 பிரிவுகளில் விருது வழங்கப்பட்டுள்ள இவ்விழாவில் இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் தனது மகனுடன் கலந்து கொண்டார்.
இவ்விழாவில் இந்தியாவைச் சேர்ந்த ரிக்கி கேஜ் இரண்டாவது முறையாக கிராமி விருது வென்றுள்ளார். “டிவைன் டைட்ஸ்..” என்ற ஆல்பம் பாடலுக்காக, ஸ்டீவர்ட் கோப்லேண்ட் உடன் இணைந்து இவ்விருதினை ரிக்கி கேஜ் பெற்றுள்ளார். அப்போது மேடையில் 'நமஸ்தே' என்று கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
இந்நிலையில் கிராமி விருது பெற்ற ரிக்கி கேஜ்க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்கும், உங்களது எதிர்கால முயற்சிக்கும் வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார். இவ்விழாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பாடகி ஃபால்குனி ஷா சிறந்த குழந்தைகள் ஆல்பம் பிரிவில் 'கலர்புல் வேர்ல்ட்' ஆல்பத்திற்காக கிராமி விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.