Published on 18/02/2023 | Edited on 18/02/2023
![dyfi one crore signature movement Vijay Sethupathi, Aishwarya Rajesh support](http://image.nakkheeran.in/cdn/farfuture/yL0WxnCDEDycBokfUY37zuMdES5kECt-nM9b1fxhUw0/1676716065/sites/default/files/inline-images/37_34.jpg)
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் போதைக்கு எதிராக போதையற்ற தமிழ்நாடு முழக்கத்தினை முன்வைத்து ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை ஏற்பாடு செய்துள்ளனர். இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா கடந்த 12ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
பல்வேறு நபர்களிடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கையெழுத்து வாங்கி வரும் நிலையில், திரைப்பிரபலங்களும் இதில் கையெழுத்திட்டு தங்களது ஆதரவினை அளித்துள்ளனர். அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் உள்ளிட்டோர் தற்போது கையெழுத்திட்டுள்ளனர்.
போதைக்கு எதிரான இந்த முன்னெடுப்பில் திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளது பலரது பாராட்டைப் பெற்று வருகிறது.