Skip to main content

'அது சஞ்சய் அக்கவுண்ட் இல்லை' - விஜய் தரப்பு அதிரடி அறிக்கை

Published on 12/10/2018 | Edited on 12/10/2018
sanjay

 

 

 

நடிகர் விஜய்யின் மகனான சஞ்சய் விஜய் இன்ஸ்டாகிராமில் தனக்கு பிடித்த நடிகர் அஜித் மற்றும் விஜய் சேதுபதி தான் என்றும் கூறியதாக சமீபத்தில் தகவல் ஒன்று உலா வந்தது. பிறகு இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியாமல் ரசிகர்கள் பலரும் குழம்பிய நிலையில் விஜய்யின் மகன் சஞ்சய் எந்த ஒரு சமூக வலைத்தளங்களில் இல்லை என தற்போது அறிக்கை வெளியாகியுள்ளது. அதில்..."சமீப காலத்தில் தளபதி விஜய் அவர்களின் மகனான சஞ்சய் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருப்பதாகவும், அதில் அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருவதாகவும் கூறி வருகின்றனர். மேலும் அந்த பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக புகைப்படங்களாக பரவி வருகிறது. இதனை யாரும் நம்ப வேண்டாம். தளபதி விஜயின் மகன் சஞ்சய், மகள் திவ்யா சாஷா இருவருமே எந்த ஒரு சமூக வலைத்தளங்களிலும் இல்லை. தயவு செய்து தளபதி விஜய் ரசிகர்கள் யாரும் இந்த போலி கணக்குகளுக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டாம் எனவும் அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று விஜய் தரப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இரண்டாம் கட்ட கல்வி விழா- அதிகாலையிலேயே புறப்பட்ட விஜய்

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
Second phase of education ceremony- Vijay started to leave early in the morning

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் இரண்டாம் கட்டமாக நடைபெறும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழாவிற்காக தற்பொழுது திருவான்மியூரில் உள்ள மண்டபத்திற்கு சென்றுள்ளார்.

சென்னை திருவான்மியூரில் மண்டபம் ஒன்றில் இதற்கான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் நேரில் அழைத்துப் பாராட்டு தெரிவித்து வருகிறார். கடந்த வாரம் 28 ஆம் தேதி தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்ற இந்த நிலையில், இன்று புதுச்சேரி காரைக்கால் உட்பட 19 மாவட்டங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற இருக்கிறது. இதற்காக தற்போது நடிகர் விஜய் திருவான்மியூரில் உள்ள மண்டபத்திற்கு அதிகாலையிலேயே சென்றுள்ளார். மற்ற நேரங்களில் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அதிகாலையிலேயே அவர் மண்டபத்திற்கு சென்றதாகக் கூறப்படுகிறது. 725 மாணவ -மாணவிகள் உட்பட 3,500 பேர் இன்றைய பாராட்டு நிகழ்வில் கலந்து கொள்ள இருக்கின்றனர். இரண்டாம் கட்ட நிகழ்வில் பேச மாட்டேன் என விஜய் அன்று கூறியிருந்த நிலையில் திடீர் டிவிஸ்ட்டாக இன்று மாணவர்கள் மத்தியில் விஜய் பேசப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

Next Story

‘விஜய் முதல்வர் ஆனால்... கோரிக்கை வைத்த மாணவரின் பெற்றோர்!

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
 Parents of the student who requested to vijay

நடப்பாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் சான்றிதழும், ஊக்கத்தொகையும் இரண்டு கட்டங்களாக வழங்குவதாக அறிவித்திருந்தார். அதன்படி, இன்று(28-06-24) முதற்கட்டமாக அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி ,கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சென்னை, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் விருதும், ஊக்கத்தொகையும் விஜய் வழங்கி வருகிறார்.

இதில் பேசிய மாணவரின் பெற்றோர் ஒருவர் விஜய்யிடம் வேண்டுகோள் விடுத்து அரங்கை அதிரை வைத்தார். அதில் பேசிய மாணவரின் பெற்றோர், “வரும் 2026ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறும் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் அமரும் பட்சத்தில், விஜய் முதலமைச்சர் ஆகும் பட்சத்தில் நான் 3 வேண்டுகோளை மட்டும் முன்வைக்கிறேன். தமிழகத்தில் நடைபெறும் சாதி ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என உங்களிடம் பணிவோடு வேண்டி கேட்டுக்கொள்கிறேன். அதே போல், தமிழகம் ஒரு சாதியற்ற சமூகமாக மாற வேண்டும், மலர வேண்டும் என்பதற்காக சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர்களுக்கு சாதியற்றோர் என்ற அடையாளத்தை வழங்க வேண்டும். அவர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். 

மேலும், தமிழகத்தில் குடிநோயாளிகள் அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த தலைமுறை ஒரு குடிநோயாளிகளான சமூகமாக மாறிவிடக்கூடாது. ஆகவே, நீங்கள் முதலமைச்சராகப்  பதவியேற்கும் முதல்  கையெழுத்தாகத்  தமிழகம் ஒரு  மதுவற்ற  மாநிலமாக மாற வேண்டும், மலர வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொண்டு தமிழ் மக்கள் தெருவெல்லாம் உங்கள் பேச்சாக இருக்கட்டும். அதற்கு உங்கள் அறிவார்ந்த செயல்பாடுகளே எடுத்துக்காட்டாக இருக்கட்டும்.  தமிழ் குலம்  ஒரு நாள்  உன்னைத்  தலைமையில் அமர்த்தும் என அன்போடு வாழ்த்துகிறேன்”  எனப்  பேசினார்.