Skip to main content

தீவிர அரசியலுக்கு பிரேக்... சினிமாவில் மீண்டும் ஆர்வம் காட்டும் பிரபல நடிகை...

Published on 07/11/2019 | Edited on 07/11/2019

கடந்த 2003ஆம் ஆண்டு கன்னட மொழியில் அபி என்ற படத்தில் அறிமுகமானார் திவ்யா ஸ்பந்தனா. இதனையடுத்து சிம்புவின் குத்து படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமடைந்தார். இதன்பின் கன்னடம், தமிழ், தெலுங்கு என்று பிஸியாக நடித்து வந்த ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா. திடீரென கர்நாடக அரசியலில் குதித்தார். கர்நாடக காங்கிரஸ் கட்சியில் இனைந்து இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்பியும் ஆனார். அதன்பின் காங்கிரஸ் கட்சியில் சமூக வலைதளங்களை கவனிக்கும் பொறுப்பை வகித்துவந்தார்.
 

divya spandana

 

 

நிறைய முறை பிரதமர் நரேந்திர மோடி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து சர்ச்சையில் அடிக்கடி சிக்கியுள்ளார். சமீபத்தில்கூட இவர் காதலித்து வந்த வெளிநாட்டு தொழிலதிபருடன் காதல் முறிவடைந்தது என்பதை தெரிவித்தார். 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு பின்னர் திவ்யா ஸ்பந்தனா அவ்வளவாக எந்தவித பொது விஷயங்களிலும் கலந்துகொள்ளவில்லை, அரசியல் ரீதியாகவும்தான்.

இந்நிலையில் தில் கா ராஜா என்னும் கன்னட படத்தில் நடித்தார். இந்த படத்தின் டீஸரும் சமீபத்தில் வெளியாகி திவ்யாவின் ரசிகர்களை குஷியாக்கியது. பிரஜ்வால் தேவராஜ் என்பவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் திவ்யா. இப்படத்தை சோம்நாத் என்பவர் இயக்கியுள்ளார்.
 

miga miga avasaram


இந்த படம் வெளியான பிறகு தமிழ், தெலுங்கிலும் மீண்டும் நடிப்பார். மீண்டும் திரையுலகில் ஒரு ரவுண்ட் திவ்யா வருவார் என்று அவரது ரசிகர்கள் குஷியாக இருக்கின்றனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

"தற்கொலை செய்யவும் நினைத்தேன்; ராகுல் காந்தி தான் உதவினார்" - எமோஷனலான நடிகை

Published on 29/03/2023 | Edited on 29/03/2023

 

divya spandana about rahul gandhi

 

சிம்புவின் 'குத்து', தனுஷின் 'பொல்லாதவன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் கன்னட நடிகை ரம்யா. திவ்யா ஸ்பந்தனா என்ற பெயர் கொண்ட இவர் திரையில் ரம்யா என்ற பெயரை பயன்படுத்தி பின்னர் தனது பெயரிலேயே நடித்து வந்தார். நடிப்பை தாண்டி அரசியலிலும் ஈடுபட்டு வரும் ரம்யா 2013 ஆம் ஆண்டு மண்டியா மக்களவை தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

 

பிறகு அரசியலில் அதிக கவனம் செலுத்தி வந்த ரம்யா 2016க்கு பிறகு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போது ரோஹித் பதகியின் 'உத்தரகாண்டா' என்ற கன்னடம் படம் மூலம் மீண்டும் திரைக்கு ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார் ரம்யா. படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

 

இந்த நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய திவ்யா ஸ்பந்தனா, அவர் எம்.பி ஆனது குறித்தும் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகள் குறித்தும் பேசியுள்ளார். அவர் பேசுகையில், "எனது தந்தையை இழந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு பாராளுமன்றத்தில் நுழைந்தேன். பாராளுமன்ற நடவடிக்கைகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அங்கு யாரையும் தெரியாது. ஆனால், நான் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேன். நான் என் வருத்தத்தை என் வேலையை நோக்கி செலுத்தினேன். அந்த நம்பிக்கையை எனக்கு கொடுத்தது மண்டியா மக்கள்தான்.

 

என் வாழ்வில் முதல் வழிகாட்டி என் அம்மா. இரண்டாவது என் தந்தை. அடுத்து மூன்றாவதாக ராகுல் காந்தி தான். நான் என் தந்தையை இழந்தபோது, ​​​​நான் பெரும் துயரத்தில் இருந்தேன். தற்கொலை செய்து கொள்ளவும் நினைத்தேன். போட்டியிட்ட தேர்தலிலும் தோற்றேன். அது மிக மோசமான காலகட்டம். அந்த நேரத்தில் ராகுல் காந்தி தான் எனக்கு பெரிதும் உதவினார்" என எமோஷனலாக பேசினார். 

 

 

Next Story

'மக்கள் என்ன வருவாய் உருவாக்கும் இயந்திரங்களா?'-மருத்துவர் சர்மிகாவிற்கு ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ் கண்டனம்

Published on 16/01/2023 | Edited on 17/01/2023

 

people revenue generating machines?'-Nutritionist Divya Sathyaraj slams Dr Sarmika

 

சமீபத்தில் சித்த மருத்துவர் சர்மிகா தெரிவித்திருந்த கருத்துக்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், சர்மிகாவின் கருத்துக்களுக்கு ஊட்டச்சத்து நிபுணரும், நடிகர் சத்யராஜின் மகளுமான திவ்யா சத்யராஜ் தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்.

 

இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளதாவது, ''ஒரு ஊட்டச்சத்து நிபுணராக மருத்துவர் சர்மிகாவிற்கு என்னுடைய கண்டனத்தைப் பதிவு செய்கிறேன். அபத்தமான விஷயங்களை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அவர் சொல்வதற்கு அறிவியல்பூர்வமான எந்தவித நம்பகத்தன்மையையும் இல்லை. எடுத்துக்காட்டாக குலோப் ஜாமுன் சாப்பிட்டால் ஹெல்தியாக உடல் எடையை அதிகரிக்கலாம் என சொல்லியுள்ளார். நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரிதாகும் என்பதைப் போன்ற கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அவர் வீடியோவில் வெளியிட்ட இதுபோன்ற கருத்துக்களுக்கு அறிவியல்பூர்வமான நம்பகத்தன்மை இல்லை என்று கேள்விகேட்டால் அதற்கு அவர் 'ஒரு ஃப்ளோவில் சொல்லிவிட்டேன்' என்று சொல்கிறார். ஒரு மருத்துவர் என்ற அடிப்படையில் அவர் இப்படி பேசக்கூடாது. அழகு நிலையத்தில் ஒரு தவறு நேரலாம், ஆனால் ஒரு மருத்துவமனையை நடத்தும் மருத்துவர் 'சாரி நான் ஒரு ஃப்ளோவில் மருந்தை எழுதி விட்டேன், ஒரு மருத்துவக்  குறிப்பை சொல்லிவிட்டேன்' என சொன்னால் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. மக்களுடைய ஆரோக்கியத்தில் அவ்வளவு அலட்சியமாக இருக்கக் கூடாது அல்லவா.

 

அவர்களுடைய டெய்சி மருத்துவமனையையும், சித்தா மருந்துகளையும் ப்ரொமோட் செய்வதற்காக மக்களை வருவாய் உருவாக்கும் இயந்திரங்களாக பயன்படுத்தி இருக்கக் கூடாது. சில சித்தா, ஹோமியோபதி மருந்துகளில் ஸ்டீராய்டு கலக்கிறார்கள். அதனால் கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் சித்தா, ஹோமியோபதி மருந்துகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்கலாம். ஒரு நல்ல மருத்துவரின் ஆலோசனைப்படி குறிப்பாக குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் மருந்துகளாக இருக்கட்டும் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் சாப்பிடுகின்ற மருந்துகள் நல்ல மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளாக இருக்க வேண்டும். மற்றவை எல்லாம் உடல் நலத்திற்கு மிகவும் ஆபத்தானது. அவர் அவருடைய மருத்துவமனையையும், அவரது சித்தா மருந்துகளையும் விளம்பரப்படுத்துவதற்கு தவறான மருந்துகளை சொல்லிவிட்டு பிறகு தவறாகச் சொல்லிவிட்டேன் என சொல்வது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல'' என தெரிவித்துள்ளார்.