![direct ott release vikram prabhu Taanakkaran film](http://image.nakkheeran.in/cdn/farfuture/V1yzG7lRpPfQLQIdAo1P4ux6TWSuwbIYKCEoiQyogBg/1647350562/sites/default/files/inline-images/297_2.jpg)
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் விக்ரம் பிரபு, 'டாணாக்காரன்' படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் தமிழ் இயக்குகிறார். இவர் இயக்குநர் வெற்றிமாறனிடம் ‘விசாரணை’, ‘வடசென்னை’, ‘அசுரன்’, ‘விடுதலை’ ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியவர். இதில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தை எஸ்.ஆர். பிரபு தயாரிக்கிறார். இப்படத்தின் படக்குழு இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி விக்ரம் பிரபு நடித்துள்ள 'டாணாக்காரன்' திரைப்படம் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தெரிவித்துள்ளார். விக்ரம் பிரபுவின் முந்தைய படமான புலிக்குத்தி பாண்டி திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியான நிலையில் தற்போது இந்த படமும் திரையரங்கு வெளியீட்டை தவிர்த்து ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.