Skip to main content

ராமேஸ்வரத்தில் இளைஞர்களுக்கு அறிவுரை கூறிய அமீர்கான்...

Published on 21/12/2019 | Edited on 21/12/2019

‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ படத்திற்கு பிறகு அமீர்கான் நடிக்கும் படம்  ‘லால் சிங் சட்டா’.இது 1994ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான  ‘ஃபாரஸ்ட் க்ரம்’ படத்தின் ரீமேக் ஆகும். அமெரிக்க அரசியல் வரலாற்றை ஒட்டியதுபோன்று நடைபெற்ற இந்த படம், பல விருதுகளையும், நல்ல வசூலையும் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தை இந்தியாவிற்கு ஏற்றார்போல கதையில் திருத்தம் செய்து எடுக்க திட்டமிட்டார். 
 

amirkhan

 

 

அடுத்த வருட டிசம்பர் மாதம் 20ஆம் தேதி படம் ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக தெரிவித்து அதனுடன் லால் சிங் சட்டா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டார் அமீர்கான். இப்படத்தில் அமீருடன் பல பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். தமிழகத்தை சேர்ந்த விஜய் சேதுபதியும் அமீருடன் இணைந்து இப்படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

hero


இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங்கிற்காக ராமேஸ்வரம் அருகேயுள்ள தனுஷ்கோடிக்கு வந்திருந்தார் அமீர்கான். அப்போது அவரை அந்த மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் வீ. வருண்குமார் சந்தித்துப் பேசினார்.

அப்போது அங்கு ஷூட்டிங்கை காண சூழ்ந்திருந்த இளைஞர்களை பார்த்து, ராமநாதபுரம் மாவட்டம் சிறப்பு வாய்ந்தது. ஆகவே இங்குள்ள இளைஞர்கள் உடல் நலத்தை பேணுவதில் கவனம் செலுத்தவேண்டும். போதைப் பொருள்களை தவிர்த்து வாழ்க்கையை சிறந்ததாக்குவது அவசியம். வாழ்க்கை.
 

d3


ஒருமுறை என்பதை உணர்ந்து உடல் சுகாதாரத்தை பேணவேண்டும். ஆகவே தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை இளைஞர்கள் பயன்படுத்தக்கூடாது” என்று கேட்டுக்கொண்டார். இளைஞர்களுக்கு அறிவுரை கூறிய அமீரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார் நன்றி தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"ரூ.2 கோடிக்கு இணையான நடிப்புக்கு ரூ.200 கோடி சம்பளம்" - சூப்பர் ஸ்டார்களை விளாசிய கங்கனா

Published on 03/11/2022 | Edited on 03/11/2022

 

kangana ranaut talks about aamir khan lal singh chaddha failure

 

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரனாவத் அவ்வப்போது அரசியல் குறித்தும் சமூகத்தில் நடக்கும் சம்பவங்கள் குறித்தும் கருத்து தெரிவித்து வருகிறார். இதில் பல கருத்துகள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மேலும் பாலிவுட்டில் திரையுலகினர் வாரிசுகளின் ஆதிக்கம் குறித்தும் தொடர்ந்து பல்வேறு கருத்துகளைக் கூறி வந்தார். 

 

அந்த வகையில் தற்போது அமீர்கானின் 'லால் சிங் சத்தா' படம் தோல்வியடைந்தது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. இது தொடர்பாக பதிலளித்த அவர் "சூப்பர் ஸ்டார்களுக்கு எல்லா விதமான சலுகைகளும் உண்டு. ரூ.2 கோடிக்கு இணையான நடிப்பை கொடுத்துவிட்டு ரூ.200 கோடி சம்பளம் பெறுகிறார்கள். எகானமி விமானத்தில் போகக்கூடிய இடத்தில் தனி விமானம் எடுத்துச் செல்கிறார்கள். அமீர்கான் பற்றி பேசுகையில், நான் குறிப்பாக புறக்கணிப்பு (Boycott) பற்றி பேசவில்லை. 

 

உலக நாடுகளில் நம் நாட்டை சகிப்புத்தன்மையற்றது என்று கூறி, நம் நாட்டின் பெயரை களங்கப்படுத்தினார். நேர்மையான மற்றும் உண்மையான தேசபக்தர்களுக்கு மரியாதை தரும் பழைய படங்களால், சாதாரண மக்களைத் தொடர்பு கொள்ள முடியாது. 'லால் சிங் சத்தா' படம் தோல்வியடைந்ததற்கு புறக்கணிப்பு கலாச்சாரம் காரணம் அல்ல இந்தியாவுக்கு எதிரான அவரது கருத்துக்கள் தான்" என விமர்சித்தார் கங்கனா ரனாவத். 

 

அத்வைத் சந்தன் இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி தோல்வியடைந்த படம் 'லால் சிங் சத்தா'.  இப்படம் 1994ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தின் ரிலீஸ் சமயத்தில் அமீர்கான் முன்னதாக ஒரு பேட்டியில் "இந்தியாவில் சகிப்புத்தன்மை இல்லை" எனப் பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்த வீடியோவை பலர் பகிர்ந்து படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று (#boycottLaalSinghChaddha) என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 


 

Next Story

ஐ.பி.எல் இறுதி போட்டியில் அமீர்கான் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

Published on 21/05/2022 | Edited on 21/05/2022

 

aamir khan lal singh chaddha movie trailer release IPL final

 

'தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' படத்தை தொடர்ந்து அமீர் கான் 'லால் சிங் சத்தா' என்னும் படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை அத்வைத் சந்தன் இயக்கியுள்ளார். அமீர் கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்க, மோனா சிங், நாகா சைதன்யா உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது 1994ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் டாம் ஹான்க்ஸ் நடிப்பில் வெளியாகி, உலகம் முழுவதும் பல விருதுகளைக் குவித்த ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் அதிகாரப்பூர்வ தழுவல் ஆகும். இந்தப் படத்தில் குறைந்த அளவிலான ஐக்யூ உள்ளவர் கதாபாத்திரத்தில் அமீர்கான் நடித்துள்ளார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில் படத்தின் ட்ரைலர் ஐ.பி.எல் இறுதி போட்டியில் வெளியிடப்படவுள்ளது. ஐ.பி.எல் தொடரின் 15வது சீசன் மும்பை மற்றும் புனேவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இறுதிப் போட்டி வரும் 29 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாக ஏ.ஆர் ரஹ்மான் தலைமையில் கலை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் லால் சிங் சத்தா படத்தின் ட்ரைலர் வெளியிடப்படவுள்ளது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக  ஒளிபரப்புகிறது. உலக வரலாற்றிலேயே இதுவரை எந்த படத்தின் ட்ரைலரும்  இது போன்ற கிரிக்கெட் நிகழ்ச்சிகளில் வெளியாகாத நிலையில் முதல் முறையாக இப்படத்தின் ட்ரைலர் வெளியாகவுள்ளது. இதனால் அமீர்கானின் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளன.