Skip to main content

பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்காதது ஏன் ? - அமலா பால் விளக்கம்

Published on 13/09/2022 | Edited on 13/09/2022

 

amala paul explained why she did not act in ponniyin selvan

 

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் வருகிற 30 ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. ரிலீஸ் தேதி நெருங்கியுள்ளதால் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. 

 

இந்நிலையில் அமலா பால், பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு பெற்று அதனை நிராகரித்துள்ளதாகவும் நடிக்காததற்காக வருந்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அமலாபால், "சில வருடங்களுக்கு முன் ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்காக மணிரத்னம் என்னை அழைத்தார். நான் அவர் ரசிகை என்பதால் உற்சாகமாக ஆடிஷனில் கலந்துகொண்டேன். ஆனால், அப்போது அந்தப் படம் தொடங்கப்படவில்லை. இதனால் வருத்தமும், கவலையும் அடைந்தேன்.

 

பின்னர் 2021-ம் ஆண்டு அதே படத்துக்காக அவர் என்னை அழைத்தபோது எனக்கு நடிக்கும் மனநிலை இல்லை. அதனால் மறுத்துவிட்டேன். இதற்காக வருந்துகிறேனா? என்றால் இல்லை." என்று கூறியுள்ளார். மேலும் வாழ்க்கையில் சில விஷயங்கள் என்ன நடக்குமோ அது சரியாக நடக்கும் என்பது போல் பேசியுள்ளார் அமலா பால்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரம்மண்டமாக நடந்த அமலா பால் வீட்டு நிகழ்வு

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
amala paul baby showering photos

அமலா பால் தற்போது மலையாளத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் பிரித்திவிராஜ் நடிப்பில் கடந்த மாதம் 28ஆம் தேதி வெளியான ஆடுஜீவிதம் படத்தில் நடித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை படம் பெற்று வருகிறது. இப்படத்தை தவிர்த்து தற்போது இரண்டு மலையாள படங்கள் கைவசம் வைத்துள்ளார். 

இதனிடையே கடந்த 2014ஆம்  ஆண்டு இயக்குநர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அமலா பால். பின்பு 2017 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார். 2020 ஆம் ஆண்டு மும்பையை சேர்ந்த பாடகர் பவ்நிந்தர் சிங்குடன், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக தகவல் வெளியானது. மேலும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி இணையதளத்தில் வைரலானது. ஆனால் இதை அமலா பால் அந்த புகைப்படங்கள் வெறும் ஃபோட்டோஷூட் தான் என மறுத்துவிட்டார். 

இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி அவரது பிறந்தநாளன்று அவரின் நண்பர் ஜகத் தேசாய் ப்ரபோசலுக்கு சம்மதம் தெரிவித்தார். மேலும் விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக தெரிவித்தார். அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி கேரள மாநிலம், கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஜகத் தேசாயை அமலா பால் திருமணம் செய்துகொண்டார். 

திருமணமான நான்கே மாதத்தில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் அமலா பால். அப்படி இருக்கும் நிலையில் கூட ஆடுஜீவிதம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இதையடுத்து கர்ப்பமானதை கணவருடன் பார்டி வைத்து கொண்டாடினார். அப்போது கணவருடன் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. 

இந்த நிலையில் அமலா பாலுக்கு வளைகாப்பு விழா பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. கேரளாவில் நடந்த இந்த விழாவில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.  

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amala Paul (@amalapaul)

Next Story

ஆசிய திரைப்பட விருது; 4 பிரிவுகளில் 'பாரடைஸ்'!

Published on 14/01/2024 | Edited on 14/01/2024
 Asian Film Award; 'Paradise' in 4 sections!

நியூட்டன் சினிமா தயாரிப்பில் வெளியான பாரடைஸ் படம் ஆசிய திரைப்பட விருதுகளில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த எடிட்டர் ஆகிய 4 பிரிவுகளில் பரிந்துரைகளைப் பெற்றுள்ளது.

நியூட்டன் சினிமாவின் பாரடைஸ் படம் மிகவும் மதிப்புமிக்க 17வது ஆசிய திரைப்பட விருதுகளில் நான்கு பிரிவுகளில் பரிந்துரைகளுடன் கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிந்துரைகளில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் பிரசன்ன விதானகே, சிறந்த திரைக்கதை பிரசன்னா விதானகே மற்றும் அனுஷ்கா சேனநாயக்க மற்றும் சிறந்த எடிட்டிங் ஏ. ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.  சினிமா சாதனைகள், கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் திறமைகளை சிறப்பித்துக் காட்டும் வகையில் புகழ்பெற்ற ஆசிய திரைப்பட விருதுகள் அகாடமியால் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆசிய திரைப்பட விருதுக்கு ஒரு படம் பரிந்துரைக்கப்படுவது ஒரு படத்தின் வெற்றி மற்றும் தரத்தின் முக்கிய குறிகாட்டியாக கருதப்படுகிறது. முக்கிய பிரிவுகளில் பாரடைஸ் படம் பல விருதுகளுக்கு ஆசிய திரைப்பட விருதுகளில் பரிந்துரைக்கப்பட்டது படத்தின் தரம் மற்றும் தகுதியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த நான்கு பரிந்துரைகளும் பாரடைஸுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை, இது சர்வதேசத் திரைப்பட சமூகத்தில் படத்தின் தாக்கத்தையும் அதிர்வலையையும் நிரூபிக்கிறது. பாரடைஸ் படம் அக்டோபர் 2023ல் பூசன் சர்வதேசத் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம் (கிம் ஜிசோக்) விருதை வென்றது. நியூட்டன் சினிமா தயாரிப்பு நிறுவனத்திற்கு, சிறந்த திரைப்படத்திற்கான பரிந்துரை சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நியமனம், உலகளாவிய பார்வையாளர்களுடன் எதிரொலிக்கும் சினிமாவை ஆதரிப்பதற்கும் தயாரிப்பதற்கும் நிறுவனத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. இந்த படத்தின் இயக்குநர் பிரசன்ன விதானகே தனது அதீத திறமைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். ஐந்து NETPAC விருதுகள் உட்பட 30க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வென்றுள்ளார். இது அவரது அசாத்திய திறமைக்கு மற்றும் தொலைநோக்குப் பார்வைக்கு சான்றாகும்.

பிரசன்ன விதானகே மற்றும் அனுஷ்கா சேனாநாயக்க ஆகியோருக்கான சிறந்த திரைக்கதைக்கான பரிந்துரையானது, பாரடைஸ் திரைப்படத்தின் திரைக்கதைக்கு ஒரு சான்றாகும். இது படத்தின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.  பொன்னியின் செல்வன் மற்றும் RRR போன்ற குறிப்பிடத்தக்க படங்கள் உட்பட 600 படங்களுக்கு மேல் அனுபவம் வாய்ந்த எடிட்டரான A. ஸ்ரீகர் பிரசாத்தின் சிறந்த எடிட்டிங்கிற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அவரது பங்களிப்பு அதன் கதை மற்றும் காட்சி கதைச்சொல்லலை வடிவமைப்பு முக்கியமானது.

மணிரத்னம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் வழங்கும், பாரடைஸ் படத்தில் ரோஷன் மேத்யூ, தர்ஷனா ராஜேந்திரன், ஷியாம் பெர்னாண்டோ மற்றும் மகேந்திர பெரேரா ஆகியோரின் சிறந்த நடிப்பைக் கொண்டுள்ளது. ராஜீவ் ரவியின் ஒளிப்பதிவு, கே இன் இசை, தபஸ் நாயக்கின் ஒலி வடிவமைப்பு ஆகியவற்றால் படத்தின் கலை ஆழம் மேலும் மெருகேற்றப்பட்டுள்ளது.   நியூட்டன் சினிமாவின் தலைமை நிர்வாக அதிகாரியான ஆன்டோ சிட்டிலப்பில்லி தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார்: "இந்த பரிந்துரைகள் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் பெருமை மற்றும் மகிழ்ச்சியின் தருணம். இது எங்கள் படத்திற்கான அங்கீகாரம் மட்டுமல்ல, எங்கள் குழுவின் கூட்டு மனப்பான்மை மற்றும் கடின உழைப்பின் கொண்டாட்டம்" என்று கூறினார். நியூட்டன் சினிமா, அதன் விநியோக பங்குதாரரான செஞ்சுரி ஃபிலிம்ஸுடன் இணைந்து, தயாரித்த இரண்டு படங்களை உலகளவில் திரையரங்குகளில் கொண்டு வருகிறது. பாரடைஸ் மார்ச் 2024ல் வெளியிடப்படும் மற்றும் பேமிலி பிப்ரவரி 2024ல் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.