தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியான 'சாமி' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் கோட்டா சீனிவாசராவ். தெலுங்கில் பிரபல நடிகரான இவர் தமிழ், இந்தி, மலையாளம்,கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கிட்டத்தட்ட 750 படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தெலுங்கு திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிரஞ்சீவி, "திரைப்பட தொழிலாளர்களுக்காக மருத்துவமனை கட்ட போகிறேன்" என பேசியிருந்தார்.
இந்நிலையில் கோட்டா சீனிவாசராவ் சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் சிரஞ்சீவி பேசியதற்கு தன் கருத்தை பகிர்ந்துள்ளார். அதில், "சினிமா தொழிலாளர்கள் மூன்று வேலை உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இந்த நேரத்தில் மருத்துவமனை கட்டுவது தேவையற்றது. மருத்துவமனைகளைப் பற்றி பேசுவதை விட தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை பெருக்கி அவர்களுக்கு வழி காட்டுவது மிக முக்கியமானது. போதுமான பணம் இருந்தால் எந்த தனியார் மருத்துவமனைக்கும் போகலாம். எனவே தொழிலாளர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.