Skip to main content

திரைப் பிரபலங்களின் வாழ்த்தில் துரை சுதாகரின் மகள் நிலா

Published on 26/08/2023 | Edited on 26/08/2023

 

actor thurai sudhakar function

 

நடிகர் துரை சுதாகரின் மகள் நிலாவின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. ‘களவாணி’ படம் மூலம் வில்லனாக வந்த துரை சுதாகர், ‘பட்டத்து அரசன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். 

 

நடிகராக மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் பயணித்து வரும் துரை சுதாகர், தன்னுடைய தஞ்சை மக்கள் மட்டும் இன்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார். இதனால் அவரது வீட்டின் நிகழ்ச்சிக்கு பல பிரபலங்கள் பங்கேற்று வருகிறார்கள். 

 

அந்த வகையில், துரை சுதாகரின் இளைய மகள் நிலாவின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் கடந்த 21 ஆம் தேதி தஞ்சையில் நடைபெற்றது. இதில், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், வழக்கறிஞர் எஸ்.எஸ். ராஜ்குமார், மேயர் சண். ராமநாதன் மற்றும் நடிகர்கள் விமல், கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, சிங்கம் புலி, இயக்குநர்கள் சற்குணம், கெவின் ஜோசப், அடைக்கலமாதா கல்லூரி நிறுவனர் டாக்டர். அருணாச்சலம் உள்ளிட்ட பிரபல திரைப்பட கலைஞர்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்டு குழந்தை நிலாவை வாழ்த்தினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"இன்னும் அவர் ரொம்ப நாள் நம்முடன் இருந்திருக்கலாம்" - நடிகர் மௌலி நெகிழ்ச்சி

Published on 17/10/2022 | Edited on 17/10/2022

 

"He could have been with us for a long time"- actor Mouli Leschi!

 

மறைந்த நடிகரும், வசன கர்த்தாவுமான கிரேஸி மோகனின் 70- வது பிறந்தநாளையொட்டி, ஸ்ரீ தியாக ப்ரஹ்மா கான சபா மற்றும் கிரேஸி கிரியேஷன்ஸ் சார்பில் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நடிகர் மௌலி, "மோகனின் விருது எனக்கு அளிக்கப்பட்டதற்காக அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், குழுவினருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மோகன் கூட இருந்து அவரது கையால் விருதைப் பெற்றிருந்தால் இன்னும் பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருந்திருக்கும். 

 

மோகனும் நானும் அமர்ந்து பேசாத விஷயமே இருக்காது. அதேபோல், கமல்ஹாசன் அலுவலகத்துக்கு செல்வதாக இருந்தாலும் ஒன்றாகத்தான் செல்வோம். நான் கொட்டிவாக்கத்தில் இருக்கும்போது கூட அங்கிருந்து வந்து மோகனை அழைத்துக்கொண்டு செல்வேன். நான் மோகனை ரெடி ஆகிட்டு வெளியே வந்துவிடு என்று கூறுவேன். அதற்கு மோகன் நான் சாப்பிட்டுவிட்டு வருகிறேன் என்பார். வெளியில் சாப்பிடவே மாட்டார். 

 

இன்னும் அவர் ரொம்ப நாள் நம்முடன் இருந்திருக்கலாம். அவரது மறைவு அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. கூடவே இருக்கிறார் என்று நினைத்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

Next Story

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இடி தாக்கி இறந்த இளைஞர்!!

Published on 21/10/2021 | Edited on 21/10/2021
Friend who was struck by thunder at the birthday celebration

 

ராணிப்பேட்டை தாலுகா வளவனூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நித்தீஷ். கல்லூரி மாணவரான இவர் வந்தவாசி அருகில் உள்ள தென்னாங்கூர் அரசு கலைக் கல்லூரியில் பட்டப் படிப்பு படித்து வருகிறார். விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை அருகிலுள்ள ராவணன் பட்டு கிராமத்தை சேர்ந்த தஷ்ணாமூர்த்தி என்பவரும் அதே கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரியில் ஒன்றாகப் படித்த இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகினர். இதன் அடிப்படையில் நண்பன் தஷ்ணாமூர்த்தி பிறந்தநாளை கொண்டாடுவதற்காக ராவணம் பட்டு கிராமத்திற்கு நித்தீஷ் வந்துள்ளார்.

 

அங்கு நண்பர்களுக்கு விருந்து வைப்பதற்காக நண்பர்கள் குழுவாக சேர்ந்து பிரியாணி தயார் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென இடி மின்னலுடன் மழை கொட்டத் தொடங்கியுள்ளது. பிரியாணி நனைந்து விடாமல் இருப்பதற்காக நித்தீஷ் தனது நண்பர்களுடன் அதன் மீது தார்பாய்  விரித்து பிடித்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென நித்தீஷ் மீது இடி மின்னல் தாக்கியுள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே மாணவன் நித்தீஷ் உயிரிழந்துள்ளார். உடனிருந்த அவரது நண்பர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். நண்பன் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சந்தோஷமாக வந்து பிரியாணி தயார் செய்து கொண்டிருந்த கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அவலூர்பேட்டை பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.