Skip to main content

விஷ்ணு விஷால் தந்தை மோசடி விவகாரம்: மத்திய குற்றப்பிரிவு போலீசில் நடிகர் சூரி வாக்குமூலம்

Published on 29/03/2022 | Edited on 29/03/2022

 

actor soori

 

நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை மீதான புகார் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி நடிகர் சூரி வாக்குமூலம் அளித்தார். 

 

சென்னையை அடுத்த சிறுசேரியில் நிலம் வாங்கித்தருவதாகக் கூறி முன்னாள் டி.ஜி.பி.யும் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையுமான ரமேஷ் குடவாலா தன்னிடம் மோசடி செய்ததாக சென்னை அடையாறு போலீசில் நடிகர் சூரி புகார் அளித்தார். பின்னர், தன்னுடைய புகார் குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை எனக் கூறி விசாரணையை, சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றையும் தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், கோடிக்கணக்கில் மோசடி நடந்துள்ளதால் வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி ஆறு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

 

இந்த நிலையில், மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் மீனா முன்னிலையில் ஆஜராகி மோசடி குறித்து நடிகர் சூரி வாக்குமூலம் அளித்தார். பின்னர், பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், தப்பு செய்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது எனக் கூறிய சூரி, நீதிமன்றம், காவல்துறையை கடவுளைப்போல நம்புவதாகவும் தனக்கு நீதி கிடைக்கும் என்றும் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘மூச்சு முட்ட பேச்சு முட்ட வார்த்தை தவிக்கும்...’ - காதலில் கருடன் சூரி

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
garudan movie soori Panjavarna Kiliye video song released

வெற்றிமாறன் இயக்கத்தில் 'விடுதலை' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான சூரி, தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தவிர்த்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஹீரோவாக 'கொட்டுக்காளி' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கூழாங்கல் படம் மூலம் கவனம் ஈர்த்த பி.எஸ். வினோத்ராஜ் இயக்குகிறார். மேலும் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் நிவின் பாலியுடன் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  

இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் கதையில் துரை செந்தில் குமார் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வந்தார். இதில் சூரியோடு சசிகுமார், மலையாள நடிகர் உன்னி முகுந்தனும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ஷிவதா நாயர், ரேவதி சர்மா மற்றும் சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி இணைந்து தயாரிக்கின்றனர்.  

இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் கடந்த மாதம் வெளியாகி பலரது கவனத்தை பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் ‘பஞ்சவர்ண கிளியே...’ பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலில் கதாநாயகி ரேவதி ஷர்மா கதாபாத்திரத்திற்கும் சூரி கதாபாத்திரத்திற்குமான காதலை விவரிக்கும் வகையில் உள்ளது. அதை பிரதிபலிக்கும் விதமாக, ‘யாரோட யாரோட என் காதல் கதை பேச. உன் கூட உன் கூட எத வச்சு நான் பேச. மூச்சு முட்ட பேச்சு முட்ட வார்த்தை தவிக்கும். உன்னை பார்த்ததுமே அத்தனையும் செத்து கிடக்கும்’ போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.  

Next Story

“மதத்தையும் நம்பிக்கையையும் மனசுல வை” - வைரலாகும் லால்சலாம் டிரைலர்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
 LAL SALAAM - Trailer

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'லால் சலாம்'. இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிப்ரவரி 9 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.   

இப்படத்தின் டீஸர் கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியானது. அதில் கிரிக்கெட் விளையாட்டில் இரு மதங்களை வைத்துச் செய்யும் அரசியல் குறித்துப் பேசப்பட்டிருப்பது போல கதை அமைந்துள்ளது. இதையடுத்து படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடந்தது. அதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “எங்க அப்பாவை சங்கின்னு சொல்றாங்க. அது எனக்குப் பிடிக்கவில்லை. ரஜினிகாந்த் சங்கி கிடையாது” எனப் பேசியிருந்தார். இது சர்ச்சையான நிலையில், “சங்கி என்பது கெட்ட வார்த்தை என ஐஸ்வர்யா எங்கேயும் சொல்லவில்லை. அப்பா ஒரு ஆன்மீகவாதி, எல்லா மதத்தையும் விரும்பும் ஒரு நபர், அவரை ஏன் அப்படி சொல்கிறார்கள் என்பது அவருடைய பார்வை” என ரஜினி விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது. யார் பின்னாடி கூட்டம் சேருதோ அவன் ஆபத்தானவன், மதத்தையும் நம்பிக்கையையும் மனசுல வை, மனிதநேயத்தை அதுக்கு மேல வை போன்ற வசனங்கள் சமூகவலைத்தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.