
பல்வேறு பொதுநல வழக்குகள் மூலம் பல விஷயங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து தீர்வு கண்ட சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி, வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வயது 87. அங்கு சிகிச்சை பெற்று வந்த டிராஃபிக் ராமசாமியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக நேற்று (04.05.2021) தகவல் வெளியான நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு சமூக ஊடகங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்ற நிலையில், நடிகர் 'பிக்பாஸ் 4' புகழ் ஆரி அர்ஜுனன் மறைந்த டிராஃபிக் ராமசாமிக்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில்...
"தன் தேவைக்காக அல்லாமல் மக்களின் தேவைக்காக குரல் எழுப்பிய மனிதன் டிராபிக் ராமசாமி அவர்கள். பூத உடல் மறைந்து போகலாம். ஆனால் அவர் எழுப்பிய குரலும், அவர் எழுப்பிய சிந்தனைகளும் நம்மிடையே விதைக்கப்பட்டிருக்கிறது" என கூறியுள்ளார்.