லெஜண்ட் சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன் அருள் நடித்தது செம வைரலானது.
![sarvanan arul](http://image.nakkheeran.in/cdn/farfuture/tQ56d8zQ5Ej90vVJIQm7_JtguTSCnNyCw_19yElQDTs/1560750429/sites/default/files/inline-images/saravanan-arul.jpg)
சமூக வலைதளத்தில் அவருடைய விளம்பரங்கள் மீம்ஸ், வீடியோஸ் என்று பல கோணங்களில் பரவியது. பலர் அவருடைய வீடியோக்களை கலாய்த்தாலும், சிலர் அவருடைய கடை அவரே அதற்கு புரோமோஷன் தருகிறார் இதில் என்ன இருக்கிறது என்று தெரிவித்தனர். இவர் லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் நடிப்பது பெருகி கொண்டே போனது.
இந்நிலையில் இவருக்கு சினிமாவில் நடிக்க ஆசை, அதனால்தான் இவர் இவ்வாறு செய்கிறார் என்றெல்லாம் பேசப்பட்டது. படத்தில் நடிப்பதற்கு கதைகளும் கேட்டு வருகிறார் என்று செய்திகள் வெளியாகின. தற்போது உல்லாசம் படத்தை இயக்கிய ஜுடி-ஜெர்ரி இயக்கும் படத்தில் இவர் ஹீரோவாக நடிப்பதாகவும் பெரிய முன்னணி ஹீரோயின் ஒருவரை நடிக்க ஒப்பந்தம் செய்ய பேச்சு வார்த்தை நடைபெறுவதாகவும் சொல்லப்படுகிறது.
கமர்ஷியல் மற்றுமின்றி படத்தில் கருத்தும் இருக்க வேண்டும் என்று சரவணன் அருள் சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் செப்டம்பரில் தொடங்கி அடுத்த வருட ஏப்ரல் 14ல் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.