Skip to main content

மகளிர் ஜீனியர் ஹாக்கி ஆசியக் கோப்பை; இந்தியா முதன்முறையாக சாம்பியன்

Published on 11/06/2023 | Edited on 11/06/2023

 

Women's Junior Hockey Asia Cup; India are champions for the first time

 

மகளிர் ஜூனியர் ஹாக்கி ஆசியக் கோப்பையை இந்திய அணி வென்றது. இறுதிப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது.

 

ஜப்பானில் உள்ள ககாமிகஹாரா நகரில் மகளிர் ஜூனியர் ஹாக்கி ஆசியக் கோப்பை தொடர் நடைபெற்றது. இதில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி சீனாவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இன்று நடந்த இறுதிப் போட்டியில் தென் கொரியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியுள்ளது. தென் கொரிய அணி 4 முறை சாம்பியன் பட்டம் பெற்ற அணி என்பது குறிப்பிடத்தக்கது.  

 

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூனியர் ஹாக்கி தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டி வரை சென்று தோல்வி அடைந்தது. இந்நிலையில் இன்று முதன்முறையாக இந்திய அணி ஆசியக் கோப்பையை வென்றுள்ளது. வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்திய வீராங்கனைகளுக்கு ரூ. 2 லட்சம் ரூபாயும் துணைப் பணியாளர்களுக்கு ரூ. 1 லட்சம் ரூபாயும் பரிசாக ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது.