16 ஆவது ஐபிஎல் சீசனின் 65 ஆவது லீக் போட்டி ஹைதராபாத்தில் நடந்தது. இப்போட்டியில் பெங்களூர் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் விளையாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 186 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக க்ளாசன் 104 ரன்களை எடுத்தார். பெங்களூர் அணியில் ப்ரேஸ்வெல் 2 விக்கெட்களை எடுத்தார். சிராஜ், ஹர்சல் படேல், சபாஸ் அஹமத் தலா 1 விக்கெட்டை எடுத்தனர். பின் களமிறங்கிய பெங்களூர் அணி 19.2 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 187 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக விராட் கோலி 100 ரன்களை எடுத்தார். ஃபாஃப் டுப்ளசிஸ் 71 ரன்களை எடுத்தார். ஹைதராபாத் அணியில் புவனேஷ் குமார் மற்றும் நடராஜன் தலா 1 விக்கெட்களை எடுத்தனர்.
ஐபிஎல் போட்டிகளில் அதிகமுறை 50+ பாட்னர்ஷிப் இணைகளின் பட்டியலில் ஃபாஃப் டுப்ளசிஸ் விராட் கோலி இணை இணைந்தனர். முன்னதாக டேவிட் வார்னர் மற்றும் ஜான் பேர்ஸ்டோ, ஃபாஃப் டு ப்ளசிஸ் ஜோடிகள் 7 முறை 50+ ரன்களை எடுத்திருந்தது. இதில் ஃபாஃப் டுப்ளசிஸ் மற்றும் விராட் கோலி இணையும் 7 முறை 50+ ரன்களை எடுத்து இணைந்துள்ளனர்.
விராட் கோலி இன்றைய போட்டியில் சதமடித்ததன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் அதிகமுறை சதமடித்தவர்கள் பட்டியலில் க்ரிஸ் கெயிலுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். இருவரும் 6 முறை சதமடித்துள்ளனர். அடுத்தபடியாக ஜாஸ் பட்லர் 5 முறை சதமடித்துள்ளார். அதிகமுறை சதமடித்த இந்திய வீரர்களில் விராட் முதலிடத்தில் உள்ளார். ஆட்ட நாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார்.