இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்தியாவையும் கடந்து உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் தோனி. அந்த வகையில் தோனியுடன் நடந்த தனது முதல் சந்திப்பு குறித்து பிரபல பாகிஸ்தானி நடிகை மதிரா தற்போது பகிர்ந்துகொண்டுள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், "கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பையின் போது இந்தியா, பாகிஸ்தான் அணி வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் தான் நானும் தங்கியிருந்தேன். எனக்கு பிடித்த பாகிஸ்தான் வீரர் ஒருவரிடம் ஆட்டோகிராப் வாங்க அவரிடம் சென்றேன். ஆனால் அவர் எனக்கு ஆட்டோகிராப் போடாமல் என்னை நிராகரித்தார்.
இதனால் மனமுடைந்த நான் சோகத்தில் இருந்த போது, தோனி என்னிடம் வந்து, என்னுடைய ஆட்டோகிராப் வேண்டுமா என்று கேட்டார். நானும் சந்தோஷமாக அவரிடம் ஆட்டோகிராப் பெற்றுக் கொண்டேன். மேலும் அவர் தன் இருக்கைக்கு அருகில் அமரவைத்து என்னிடம் பேசினார். இதன் பிறகு அவருக்கு நான் தீவிர ரசிகையாக மாறிவிட்டேன்" என கூறியுள்ளார்.