
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் 7- ஆவது தோல்வியைச் சந்தித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
அபுதாபியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சொதப்பலான ஆட்டத்தால் 5 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 35, கேப்டன் தோனி 28, சாம் கரண் 22, ஜாதவ் 4 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

பின்னர் 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் மட்டுமே இழந்து 17.3 ஓவரிலேயே 126 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. ஜோஸ் பட்லர் 48 பந்துகளில் 70 ரன்கள் குவித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி இடமான 8- ஆவது இடத்தில் இருக்கிறது. 10 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 வெற்றி, 7 தோல்விகளுடன் 6 புள்ளிகளைப் பெற்றுள்ளது. எஞ்சிய 4 போட்டிகளில் வென்றாலும் மற்ற அணிகளின் நிலவரத்தைப் பொறுத்தே பிளே ஆப் சுற்றுக்கு சென்னை அணி முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.