
மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற 151 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகள் மோதின. சென்னையில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய மும்பை இண்டியன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்களை எடுத்தது.

மும்பை இண்டியன்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக டி காக் - 40, பொல்லார்ட் - 35, ரோஹித் சர்மா - 32 ரன்களை சேர்த்தனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தரப்பில் விஜய் சங்கர், முஜீபுர் ரஹ்மான் தலா 2 விக்கெட்டுகளையும், காலில் அஹ்மத் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தனர்.
அதைத் தொடர்ந்து, 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடி வருகிறது. 6 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 58 ரன்கள் எடுத்துள்ளது.