Published on 15/03/2021 | Edited on 15/03/2021

அகமதாபாத்தில் நடைபெற்ற இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய 17.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக, ஜேசன் ராய் 46, மோர்கன் 28, ஸ்டோக்ஸ், டேவிட் மலான் தலா 24 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக, விராட் கோலி 73, இஷான் கிஷன் 56, ரிஷப் பந்த் 26 ரன்கள் எடுத்தனர்.
ஐந்து போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.