Skip to main content

இங்கிலாந்தின் ஆயிரமாவது டெஸ்ட்! - இந்தியாவுடன் பலப்பரீட்சை

Published on 01/08/2018 | Edited on 01/08/2018

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா இன்று களமிறங்குகிறது.
 

Virat

 

 

 

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டு வென்றிருந்தாலும், ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நம்பர் ஒன் அணியான இங்கிலாந்திடம் தோற்றது. இந்நிலையில், ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணி மோதயிருக்கிறது. 
 

இதுவரை இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் தோனி தலைமையிலான இந்திய அணியைத் தவிர மற்ற எல்லா அணிகளும் சிறப்பாக செயல்பட்டு, வெற்றியைப் பதிவு செய்திருக்கின்றன. குறிப்பாக உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக இருக்கும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மீது எதிர்பார்ப்புகள் வலுத்துள்ளன. 
 

இங்கிலாந்தைப் பொருத்தவரை ஆண்டர்சன், ப்ராட் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களைக் காட்டி மிரட்டினாலும், இந்திய அணி சிறப்பாக செயல்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 2014-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொதப்பலாக ஆடிய விராட் கோலி, தற்போது சிறந்த ஃபார்மில் இருப்பதால், அவரே இங்கிலாந்து பவுலர்களின் இலக்காக இருக்கலாம். அதேசமயம், எட்க்பாஸ்டனில் நடக்கும் இன்றைய போட்டி இங்கிலாந்து அணியின் ஆயிரமாவது டெஸ்ட் போட்டி என்பதாலும், உலகில் முதன்முறையாக ஆயிரமாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் அணி என்பதாலும் இந்தப் போட்டி அதிக கவனம் பெற்றிருக்கிறது.