நியூசிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் சேத் ரான்ஸ், தீவிபத்துக் காலங்களில் தீயணைப்பு அதிகாரியாக செயல்பட்டு, பலரை விபத்துகளில் இருந்து காத்து வருகிறார்.

களத்தில் அனல்பறக்கும் வேகத்தில் பந்துவீசி எதிரணியினரைத் திணறடிக்கும் இவர்தான், மளமளவென எரிந்துகொண்டிருக்கும் தீயினை சமயத்தில் சென்று அணைக்கிறார்.

seth

சேத் ரான்ஸ் நியூசிலாந்து அணிக்காக இரண்டு ஒருநாள் மற்றும் நான்கு டி20 போட்டிகளில் களமிறங்கியவர். மிகப்பெரிய வாய்ப்புகள் இவருக்கு வழங்கப்படவில்லை என்றாலும், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகளை ரான்ஸ் படைத்திருக்கிறார்.

Advertisment

சமீபத்தில் தி ஒயிட் ஸ்வான் பகுதியில் உள்ள வைரரப்பா எனும் உணவுவிடுதியில் ஏற்பட்ட தீவிபத்தினை சரியான நேரத்தில் சென்று அணைத்திருக்கிறார். முன்கூட்டியே அழைப்பு வந்ததால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது எனக்கூறும் ரான்ஸ், ‘கட்டிடத்தின் தெற்கு மூலையில் தீவிபத்து ஏற்பட்டது. கட்டுமானம் மற்றும் நீர்க்குழாய்ப் பகுதிகளில் சிறிதளவு சேதம் மட்டுமே ஏற்பட்டிருக்கிறது’ என தெரிவித்திருக்கிறார்.

Advertisment

இதற்குமுன், நியூசிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளராக இருந்த ஷேன் பாண்ட் கிரிக்கெட் வீரராக இருந்துகொண்டே, தீயணைப்பு அதிகாரியாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.