Published on 30/12/2020 | Edited on 30/12/2020
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரலியாவும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்றுள்ளன.
இந்தநிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில், அதிரடி தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரின்போது காயமடைந்த வார்னர், அடுத்து நடைபெற்ற இருபது ஓவர் தொடர் மற்றும் இரு அணிகளுக்குமிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகினார். அதன்பின் உடல் தகுதி பெற்றுவிட்டாலும், அணியின் கரோனா தடுப்பு வளையத்திற்கு வெளியில் இருந்ததால் இரு அணிகளுக்குமிடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.